7 கோடி EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: அதிகரிக்கும் வட்டி விகிதம்.... நாளை மறுநாள் அசத்தல் அப்டேட்

EPFO Interest Rate:  சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சுமார் 7 கோடி சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். முழுமையான வியரங்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 26, 2025, 09:52 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி
  • இபிஎஃப்ஓ வட்டி விகிதம் மாறுமா?
  • முக்கிய அப்டேட் இதோ.
7 கோடி EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: அதிகரிக்கும் வட்டி விகிதம்.... நாளை மறுநாள் அசத்தல் அப்டேட் title=

EPFO Update: தனியார் துறை ஊழியரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சுமார் 7 கோடி சந்தாதாரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இதற்கான காரணம் என்ன? முழுமையான வியரங்களை இந்த பதிவில் காணலாம்.

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு

EPFO -வின் மத்திய அறங்காவலர் குழுவின் முக்கியமான கூட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது. CBT கூட்டத்தில் பேசப்படவுள்ள முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி

EPFO ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி காத்திருக்கிறது. 2024-25 நிதியாண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (PF) வட்டி விகிதங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஒரு பெரிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது. வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என இபிஎஃப் உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்

முந்தைய நிதியாண்டில் (2023-24), EPFO ​​8.25% வட்டியை வழங்கியது. அதற்கு முன்னர், 2022-23 நிதியாண்டில், வட்டி விகிதம் 8.15% ஆகவும், 2021-22 நிதியாண்டில் 8.10% ஆகவும் இருந்தது. இப்போது அதில் எவ்வளவு மாற்றம் செய்யப்படும் என அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது. இவற்றில் நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதம் குறித்த முடிவு மிக முக்கியமான முடிவாக இருக்கும்.

நிதி அமைச்சகத்தின் ஒப்புதல்

வட்டி விகிதம் குறித்த தீர்மானம் CBT-யின் ஒப்புதல் பெற்ற பிறகு, அது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு EPFO ​​திட்டம் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது. ஆகையால், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிய ஊழியர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகின்றது. ஊழியர்கள் மட்டுமல்லாமல் நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கின்றது.

EPF Fixed Interest Rates: இபிஎஃப் நிலையான வட்டி விகிதம்

இது தவிர மற்றொரு முக்கிய விஷயம் குறித்தும் CBT கூட்டத்தில் பேசப்படும். இபிஎஃப் வட்டியை நிலையான வட்டியாக வைப்பது குறித்த முக்கியமான விவாதம் இந்த கூட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை செய்ய ஒரு இருப்பு நிதியை உருவாக்குவது அவசியம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இபிஎஃப் வட்டி விகித கணக்கீட்டில் ஏற்ற இறக்கங்கள் வந்தாலும், முதலீட்டு வருமானம் குறைவாக இருந்தாலும், EPFO ​​சந்தாதாரர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்ய நிலையான வட்டி உதவியாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யவதையே இந்த முன்மொழிவு நோக்கமாக கொண்டிருக்கும். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த முறை 2026-27 முதல் செயல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்

வேலை இழப்பு, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், திருமணம், குழந்தைகளின் கல்வி அல்லது ஓய்வு போன்றவற்றின் போது, ​​ஒரு ஊழியர் தனது PF கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை எடுக்க முடியும். இந்த நிதியின் முக்கிய நோக்கம், 7 கோடி பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் நிலையான வருமானத்தை வழங்குவதாகும். வட்டி விகிதங்களில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அல்லது EPFO ​​அதன் முதலீடுகளில் குறைந்த வருமானத்தைப் பெற்றாலும் கூட, நிலையான விகிதத்தில் வட்டி பெறுவதை இது உறுதி செய்கிறது.பணி ஓய்வு காலத்தின் மிக முக்கியமான நிதி பாதுகாப்பாக இபிஎஃப் தொகை கருதப்படுகின்றது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்: மிகக்குறைந்த டிஏ உயர்வு, AICPI எண்கள் மூலம் வந்த ஏமாற்றம்

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இன்னும் வரவில்லையா? கவலை வேண்டாம், இதை செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News