மகா சிவராத்திரி 2025: ஆனந்த வாழ்வைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பூஜை விதிகள்

Maha Shivarathri 2025: சிவராத்திரி அன்று பிரபஞ்சத்தின் ஆற்றல் மையத்திலிருந்து, வெளிப்படும் சக்தி பூமியில் பரவும் என்கின்றனர் சித்தர்கள். இந்நிலையில் அன்றைய நாளில், சிவபெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதால், பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றல் நமக்குள் இருக்கும் சக்தியை தூண்டி, அபரிமிதமாக பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2025, 08:38 AM IST
  • சிவபெருமானின் அருளைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும், ஸ்லோகங்களும், நாமங்களும்
  • மகா சிவராத்திரி நன்னாளில் திருவாசகம் பாடி வழிபடுவது பலன் தரும்.
  • சிவராத்திரி அன்று செய்யக்கூடிய நான்கு கால பூஜை.
மகா சிவராத்திரி 2025: ஆனந்த வாழ்வைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்... பூஜை விதிகள் title=

மகா சிவராத்திரி அன்று பிரபஞ்சத்தின் ஆற்றல் மையத்திலிருந்து, வெளிப்படும் சக்தி பூமியில் பரவும் என்கின்றனர் சித்தர்கள். இந்நிலையில் அன்றைய நாளில், சிவபெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதால், பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றல் நமக்குள் இருக்கும் சக்தியை தூண்டி, அபரிமிதமாக பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.

சிவராத்திரி நன்னாளில் விரதம் இருந்து, பூஜை செய்து, இரவு முழுவதும் விழித்து சிவ மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள். சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் விழித்திருக்க முடியாதவர்கள், இரவு 12:30 மணி வரை விழித்திருக்கலாம்.

சிவராத்திரி அன்று செய்யக்கூடிய நான்கு கால பூஜை

1. முதல் கால பூஜை, மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை செய்ய வேண்டும். இதனை, பிரம்மா சிவனுக்கு செய்யும் பூஜையின் காலம் என்பார்கள்.இதனால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

2. இரண்டாம் கால பூஜை மாலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை. இந்த காலத்தில் விஷ்ணு பகவான் சிவபெருமானை பூஜைக்கும் நிலையில், நாம் செய்யும் பூஜைனால், தன தானிய சம்பத்துக்கள் பெருகும் என்பது ஐதீகம்.

3. மூன்றாம் கால பூஜை இரவு 12 மணி முதல் மூன்று மணி வரை. மூன்றாம் காலத்தில் சிவனுக்கு சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதனை லிங்கோத்பவ காலம் என்று கூறுவார்கள்.

4. நான்காம் கால பூஜை அதிகாலை மூன்று மணி முதல் 6:00 மணி வரை. இந்தக் காலத்தில், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகள் முனிகள், பூதகணங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளும், சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025: பணம் அதிர்ஷ்டம் குறையாமல் இருக்க... ராசிக்கு ஏற்ற ருத்ராட்ச வகை

சிவபெருமானின் அருளைப் பெற உச்சரிக்க வேண்டிய மந்திரங்களும், ஸ்லோகங்களும், நாமங்களும்

மகாசிவராத்திரி இரவில் சிவமகாபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 8 நாமாங்களையும் எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை சொல்ல சொல்ல நற்பலன்கள் அதிகரிக்கும். நம் துன்பங்கள் அனைத்தும் விலகும்

1. ஸ்ரீ பவாய நம, 

2. ஸ்ரீ சர்வாய நம, 

3. ஸ்ரீ பசுபதயே நம, 

4. ஸ்ரீ ருத்ராய நம, 

5. ஸ்ரீ உக்ராய நம, 

6. ஸ்ரீ மகாதேவாய நம, 

7. ஸ்ரீ பீமாய நம, 

8. ஸ்ரீ ஈசாராய நம

மகா சிவராத்திரி நன்னாளில் திருவாசகம் பாடி வழிபடுவது பலன் தரும்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

வில்வாஷ்டகம், பில்வாஷ்டகம்

சிவராத்திரியில் சொல்லி வழிபட வேண்டிய மந்திரங்களில் முக்கியமானது ஆதிசங்கரரால் அது அருளபட்ட வில்வாஷ்டகம், பில்வாஷ்டகம். சிவலிங்கத்திற்கு இந்த மந்திரத்தை சொல்லி சிவனுக்கு உகந்த வில்வம் சாற்றுவது இனிமையான வாழ்வைத் தரும்

சிவமூல மந்திரம்

ஓம் நமசிவாய என்னும் சிவனின் மூல மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறப்பு

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜமஹே ஸுகந்திம் புஷ்டி-வர்தனம்
ஊர்வருகாமிவ பந்தனன் மிருத்யோர்முக்ஷ்ய மம்ரிதத்

ருத்ர காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய திமாஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025... இன்னல்கள் அனைத்தும் விலக ராசிக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News