முட்டையை உடைக்காமல் அது அழுதியதா இல்லையா என எப்படி பிடிப்பது? ‘இதை’ செய்யலாம்..

How To Identify If An Egg Is Rotten Or Not : உடலுக்கு புரதம் கிடைக்க பலர், முட்டையை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால், பல சமயங்களில் இவற்றை திறந்த பார்த்த பின்புதான் இவை அழுகி விட்டதா இல்லையா என்பதே தெரியும்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 26, 2025, 05:02 PM IST
  • கெட்டுப்போன முட்டையை எப்படி கண்டுபிடிப்பது?
  • உடைக்காமல் கண்டு பிடிக்கலாம்
  • எப்படி தெரியுமா?
முட்டையை உடைக்காமல் அது அழுதியதா இல்லையா என எப்படி பிடிப்பது? ‘இதை’ செய்யலாம்.. title=

How To Identify If An Egg Is Rotten Or Not : முட்டை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கும் நேரத்தில், அதற்கான பொருளை எல்லாம் எடுத்து வைத்து விடுவோம். கடைசியில் முட்டையை உடைத்த பின்புதான் தெரியும், அது ஒரு அழுகிப்போன முட்டை என்று.  பழத்தை அல்லது ஏதேனும் காய்கறியை வெளியில் இருந்து பார்க்கும் போது அல்லது தொட்டுப் பார்க்கும் போது அது அழுகி விட்டதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம். முட்டையை சரியான அளவில் அட்டை பாக்ஸில் போட்டு வைத்தால் அது அழுகாமல் இருக்கும். ஆனால், அப்படி வெளியில் வைத்தும் அந்த முட்டை அழுகி விட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தண்ணீரில் போட்டு பார்ப்பது:

டேப் தண்ணீரை டம்ளர்களில் பிடித்து வையுங்கள். அதன் பிறகு அதில் முட்டையை போட்டு பாருங்கள். அது, தண்ணீரில் மூழ்கி ஒரு பக்கமாக சென்று விட்டால் அது நல்ல் அமுட்டை என்று அர்த்தம். இதனை உடைத்து சமைத்து சாப்பிடலாம். ஆனால், அதே முட்டை, கீழே மூழ்காமல் தண்ணீரிலேயே மிதந்தால், அந்த முட்டை கெட்டுப்போய் விட்டது என அர்த்தம். அதனை உடைத்து பார்க்காமல் அப்படியே தூக்கி போட்டு விடலாம்.

கெட்டுப்போன முட்டைகள் வெளியில் பார்க்க எப்படி இருக்கும்?

ஒரு முட்டையை வெளியில் இருந்து அப்படியே கையில் வைத்து பார்க்கும் போது அது கெட்டுப்போய் விட்டதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ஒரு சில சமயங்களில் கெட்டுப்போன முட்டைகள் வெளியில் உடைந்து காணப்படும். அதன் ஓடுகள் ஆங்காங்கே க்ராக் விட்டது போல இருக்கும். அதே போல கலரும் கொஞ்சம் மாறியது போல இருக்கும். 

உடைத்த பின்பு, அந்த முட்டையை கவனமாக பாருங்கள். அதை ஒரு தட்டில் போட்டு மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கரு எப்படியிருக்கிறது என பார்க்க வேண்டும். ஃப்ரெஷ்ஷாக இருக்கும் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு தட்டில் போட்டவுடன் பெரிதாக பரவாது. ஆனால், கெட்டுப்போன முட்டியின் கரு தட்டில் போட்டவுடன் வேகமாக பரவும்.

முட்டை கெட்டுப்போவதை எப்படி தடுப்பது?

  • முட்டை கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. அதில் சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
  • வாங்கும் போதே சரியான முட்டையைதான் வாங்குகிறோமா என்பதை பார்க்க வேண்டும்.
  • உடைந்து போன, அழுகிப்போன நிலையில் இருக்கும் முட்டைகளை வாங்க வேண்டாம். 
  • விரிசல் விட்டிருக்கும், அழுக்கு படிந்த முட்டையை வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.
  • முட்டையை சூடான பகுதிகளில் வைக்க வேண்டாம். 
  • முட்டையை வாங்கி வந்தவுடன் அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.  அதற்கென்று இருக்கும் இடத்தில் வைத்தால் அதை கீழே விழுந்து உடையாமல் தவிர்க்கலாம்.
  • முட்டைகளை எப்படி பதப்படுத்தி வைத்தாலும் அவற்றை 6 வாரங்களுக்கு மேல் உபயோகிக்காமல் வைத்திருக்க கூடாது. அவற்றை அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்து உபயோகித்து விட வேண்டும்.

கெட்டுப்போன முட்டையை சாப்பிட்டால் என்ன ஆகும்?

  • கெட்டுப்போன முட்டையை சாப்பிடும் போது, உங்கள் உடலில் உங்களையே அறியாமல் பல பாதிப்புகள் ஏற்படும்.
  • வயிற்றுப்போக்கு, குமட்டல்-வாந்தி வரும்
  • மேல்வயிறு வலிக்கும்
  • காய்ச்சல் வரலாம்
  • எனவே, முட்டையை சாப்பிடுவதற்கு முன்னர் அதை சரியாக பார்க்க வேண்டியது நல்லது.

மேலும் படிக்க | முட்டை உடன் இந்த 5 காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால்... ருசியும் கிடைக்கும், ஊட்டச்சத்தும் கிடைக்கும்!

மேலும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News