பப்பாளி விதைகளை இனி தூக்கி போடாதீங்க: ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்.... லிஸ்ட் இதோ

Health Benefits of Papaya Seeds: பப்பாளி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல உடல்நலப் பிரச்சினைகளை நீக்க உதவுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 4, 2025, 12:14 PM IST
  • பப்பாளி விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
  • அவை உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
  • பப்பாளி விதைகள் சிறுநீரகங்களுக்கும் நல்லது.
பப்பாளி விதைகளை இனி தூக்கி போடாதீங்க: ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள்.... லிஸ்ட் இதோ title=

Health Benefits of Papaya Seeds: நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை அளிக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பப்பாளியைப் போலவே, அதன் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை.

பப்பாளி விதைகள்

பப்பாளி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல உடல்நலப் பிரச்சினைகளை நீக்க உதவுகின்றன. பப்பாளி விதைகளை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், பல நோய்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

பப்பாளி விதைகளின் நன்மைகள்

செரிமானம்:

பப்பாளி விதைகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. பப்பாளி விதைகளில் பப்பேன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் இது நிவாரணம் அளிக்கிறது. 

கல்லீரல் பாதுகாப்பு

பப்பாளி விதைகள் கல்லீரலுக்கும் நன்மை பயக்கும். இவை கல்லீரலில் இருந்து நச்சுகளை அகற்றி கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன. 

எடை இழப்பு

பப்பாளி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால் இது உடல் பருமனை குறைத்து எடை இழப்புக்கு உதவுகின்றது. ஏனெனில் இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. 

சிறுநீரகம்

பப்பாளி விதைகள் சிறுநீரகங்களுக்கும் நல்லது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இது சிறுநீரகங்களில் குவிந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. 

தொற்றுகள்

பப்பாளி விதைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. 

நீரிழிவு நோய்

பப்பாளி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன. அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 

கெட்ட கொலஸ்ட்ரால்

கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதிலும் பப்பாளி நன்மை பயக்கும். பப்பாளி விதைகளில் ஒலிக் அமிலம் காணப்படுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து அதை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. 

பப்பாளி விதைகளை எப்படி உட்கொள்வது?

பப்பாளி விதைகளை பல வழிகளில் சாப்பிடலாம். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். பச்சையான பப்பாளி விதைகளை சாப்பிடுவது அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. பப்பாளி விதைகளைப் பொடி செய்தும் சாப்பிடலாம். இது தவிர, அதன் விதைகளை மிக்சியில் போட்டு சாற்றைப் பிரித்தெடுத்தும் உட்கொள்ளலாம். சிலர் பப்பாளி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்தும் உட்கொள்கிறார்கள். ஸ்மூத்திகளிலும் பப்பாளி விதைகளையும் சேர்க்கலாம்.

இவற்றில் கவனம் தேவை

பப்பாளி விதைகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதிகமாக உட்கொள்வது வயிற்றில் பல வித உபாதைகளை ஏற்படுத்தும். தினமும் ஒரு டீஸ்பூன் விதைப் பொடியை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும். எனினும், கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகளை உட்கொள்ளக்கூடாது. இது பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குழந்தைகள் பப்பாளி விதைகளை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் நாளை சீரக தண்ணீருடன் தொடங்குங்கள்.. இந்த பிரச்சனை எல்லாம் வராது!

மேலும் படிக்க | ஜிம்முக்கு போகும் முன் மறந்தும் சாப்பிடக்கூடாத உணவுகள்... ஆரோக்கியமான இருந்தாலும் வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News