Coolie Movie First Choice To Play Rajinikanth Daughter : 2025ஆம் ஆண்டில், வெளியாக இருக்கும் பெரிய படங்களுள் ஒன்று, கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் ஸ்டார் நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கூலி படத்தில் ரஜினியின் மகள்:
கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மகள் கதாப்பாத்திரம் இருக்கிறது. இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பது வேறு யாருமில்லை, நடிகை ஸ்ருதிஹாசன்தான். நடிகர் கமல்ஹாசனின் மகளான இவர், தமிழ் படங்களில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது கூலி படம் மூலம் இவர் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். இந்த படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ப்ரீத்தி ஆகும். இந்த நிலையில், இதில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகை என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
யார் அந்த நடிகை?
அந்த நடிகை வேறு யாருமில்லை, மாளவிகா மோகனன்தான். 2019ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தாராம். அதில், ரஜினிக்கு மகளாக நடிக்க வைக்க மாளவிகாவைதான் அவர் அப்ரோச் செய்திருக்கிறார். ஆனால், அப்போது இந்தியில் ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டதால் அப்போது அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டாராம், மாளவிகா. ஆனால், லோகி திட்டமிட்டபடி மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரால் ரஜினியின் படத்தை எடுக்க முடியவில்லை.
இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் மாளவிகா, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் இந்த படத்தின் வேலைகள் நடைபெற இருந்ததாகவும், கொரோனா காலம் துவங்கியதால் அந்த வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால், கூலி படத்தைதான் இவர் குறிப்பிடுவதாக பலர் கூறி வருகின்றனர். இது நெட்டிசன்களின் கருத்து மட்டுமே, இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கூலி திரைப்படம்:
கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ‘தேவா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். லோகி இயக்கும் இந்த படம், LCU-வில் இல்லாமல் தனி கதை கொண்ட படமாக இருப்பதாக கூறப்படுகிறது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கி வரும் இந்த படம், வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி, கூலி படத்திலிருந்து ‘சிட்டுக்கு வைப்ஸ்’ என்ற பாடல் வெளியானது. இதில் நடிகர் ரஜினி இளைஞர்களுடன் சேர்ந்து வைப் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இணையவாசிகள் இதனை ரீல்ஸ் வீடியோக்களாக செய்து, பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
லோகியின் அடுத்த ப்ளான் என்ன?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடந்த ஆண்டு ஸ்ருதியுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்து-நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இதையடுத்து, அவர் உருவாக்கியிருக்கும் LCU-வில் இன்னும் 2 படங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த பட ஹீரோ! ‘இந்த’ 41 வயது நடிகர்தான்..யார் தெரியுமா?
மேலும் படிக்க | Coolie Cast : கூலி படத்தில் புதிதாக இணையும் ‘அந்த’ இந்தி நடிகர்!! யாருன்னு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ