யார் இந்த எட் ஷீரன்? ஆங்கில பாடகர் சென்னையில் கான்சர்ட் நடத்துவது ஏன்?

Ed Sheeran Chennai Concert : பிரபல ஆங்கில பாடகர் எட் ஷீரன், இன்று நந்தனம் YMCA மைதானத்தில் தனது இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். ஆனால் இவர் யார் என்பது பெரும்பாலான சென்னை வாசிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவர் யார் என்பது குறித்து, இங்கு பார்ப்போம்.

Ed Sheeran Chennai Concert : உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஆங்கில பாப் பாடகராக இருப்பவர், எட் ஷீரன். தான் எழுதும் பாடலுக்கு தானே மெட்டு போட்டு பாடும் இவர், சமீபத்தில் இந்தியா டூர் ஆரம்பித்தார். பிப்ரவரி 15ஆம் தேதி வரை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இவர் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, பிப்., 5ஆம் தேதியான இன்று சென்னை YMCA மைதானத்தில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3,000ல் ஆரம்பித்து, ரூ.24,000 வரை செல்கிறது. அது சரி, யார் இந்த எட் ஷீரன்? இந்த ஆங்கில பாடகருக்கு சென்னையில் என்ன வேலை? இவர் இங்கு இசை நிகழ்ச்சி நடத்துவது ஏன்? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

1 /7

மிகப்பிரபலமான பாடகராகவும் பாடலாசியராகவும் வலம் வரும் எட் ஷீரன், இங்கிலாந்தை சேர்ந்தவர். ஷேப் ஆஃப் யூ, பெர்ஃபெக்ட், திங்கிங் அவுட் லவுட் உள்ளிட்டவை இவரது ஹிட் பாடல்களாகும். 33 வயதாகும் இந்த பாடகர், சிறு வயதில் இருந்தே பெரிய இசை ஆர்வம் மிக்கவர். 

2 /7

இவரது ஆல்பங்கள் மட்டும் உலகளவில் பல பில்லியன் கணக்கில் விலை போகுபவை ஆகும். காரணம், இவருக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

3 /7

எட் ஷீரன், வருடத்தில் 3 மாதம் புதிய பாடலை உருவாக்குகிறார் என்றால், பிற மாதங்கள் முழுவதும் டூரிலேயே இருப்பார். அந்த வகையில், சமீபத்தில் இந்தியா டூரை ஆரம்பித்தார். இது, பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடக்கிறது. 

4 /7

எட் ஷீரன், இந்தியாவில் இதுவரை பல்வேறு இடங்களை சுற்றி பார்த்திருக்கிறார். கடந்த சில நாட்களில் இதுவரை புனே, ஐதராபாத் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் அவர், அடுத்ததாக சென்னைக்கு வந்திருக்கிறார்.

5 /7

எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. எட் ஷீரன், இந்திய அளவில் தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில நகரங்களை தேர்ந்தெடுத்து கான்சர்ட்களை நடத்துகிறார். அதில் ஒன்றுதான் சென்னை.

6 /7

சென்னையில் நடைபெறும் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட விற்று தீர்ந்து விட்டன. இதில் ரூ.3,000, 3,500 மற்றும் 8,000 ஆகிய விலைகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இப்போது ரூ.4,500, 9,000 மற்றும் 24,000 ஆகிய விலைகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகின்றன. 

7 /7

6 மணி நேரம், எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை தொடர்ந்து நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தேனாம்பேட்டை வழியாக வருபவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகங்கள், செனடாப் சாலை/காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் ரோட், லோட்டஸ் காலனி 2வது தெரு வழியாக மட்டும் வரலாம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருக்கிறது.