Senior Citizen Savings Scheme: மத்திய அரசாங்கம் பலதரப்பட்ட மக்களுக்கான பிரத்யேகமான பல நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் முதியோர்களுக்காக நடத்தப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிக பிரபலமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகின்றது. எந்த வித ரிஸ்கும் இல்லாமல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் நன்மைகள் என்ன? இதன் கணக்கீடுகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். அரசாங்கம் நடத்தும் இந்த திட்டத்தில் அதிகப்படியான வருமானம் கிடைக்கின்றது. பணி ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைத் திட்டமிடுவதற்கான சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஓய்வு பெற்றவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆபத்து இல்லாமல் முதலீடு செய்யலாம். அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டம் சிறு சேமிப்புத் திட்டங்களில் அதிக வட்டியை வழங்குகிறது. இது தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக அமைகிறது.
SCSS Interest Rate: இதில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 8.2% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. SCSS மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாப்பாக சேமித்து, நிலையான வருமானத்தைப் பெற உதவுகிறது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? இதன் முக்கிய நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
மூத்த குடிமக்கள் தனித்தனியாகவோ அல்லது தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுடன் கூட்டாகவோ SCSS கணக்குகளைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கணக்கிலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்ற வரம்பு உள்ளது. இதில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். ரூ.1 லட்சம் வரையிலான வைப்புத்தொகையை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள தொகையை காசோலை மூலம் செலுத்த வேண்டும்.
SCSS திட்டம் மூலம் 24 லட்சம் ரூபாய் ஈட்டுவது எப்படி?
- ஓய்வு பெற்ற தம்பதிகள் தனித்தனி SCSS கணக்குகளைத் திறப்பதன் மூலம் அதிகபட்ச நன்மையைப் பெறலாம்.
- இது அவர்களது முதலீட்டு வரம்பை ரூ.60 லட்சமாக இரட்டிப்பாக்கும்.
- இதில் காலாண்டு வட்டியாக ரூ.1,20,300 கிடைக்கும்.
- ஆண்டு அடிப்படையில் வட்டி வருமானம் ரூ.4,81,200 ஆக இருக்கும்.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது, மொத்த வட்டியாக ரூ.24,06,000 கிடைக்கும்.
- அதாவது, இரண்டு கணக்குகளின் கீழ் ரூ.60 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியாக மட்டும் ரூ.24 லட்சம் பெறலாம்.
SCSS: இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
- அதிக வருமானம்: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் மூலம், இது சிறு சேமிப்புத் திட்டங்களில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்துடன் சேர்ந்து அதிக வட்டி தரும் திட்டமாக உள்ளது.
- வரிச் சலுகைகள்: இதில் வைப்புத்தொகைகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவை. இதன் மூலம் இதில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் சேமிப்பு கிடைக்கிறது.
- பாதுகாப்பு: இந்த அரசாங்க ஆதரவு திட்டம் வைப்புத்தொகைகு 100% பாதுகாப்பை உறுதி செய்கிறது.
Single Account: ஒரே கணக்கில் 30 லட்சம் வரை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
- காலாண்டு வட்டி: ரூ.60,150
- ஆண்டு வட்டி: ரூ.2,40,600
- 5 ஆண்டுகளில் மொத்த வட்டி: ரூ.12,03,000
- மொத்த முதிர்வுத் தொகை: ரூ.42,03,000
ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் மற்றும் நிதிப் பாதுகாப்பை விரும்புவோருக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். ஐந்து வருட முதிர்வுக்குப் பிறகு புதுப்பிக்கும் விருப்பமும் இதில் உள்ளது. மூத்த குடிமக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த திட்டம் நம்பகமான வழியாக பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்த விலை! இனி வாங்கவே முடியாதா?
மேலும் படிக்க | NPS கட்டண விதிகளில் முக்கிய மாற்றம்... PFRDA வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ