America Freeze USAID Fund: அமெரிக்கா உலகில் உள்ள பல நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி வழங்கி வருகிறது. இந்த நிதி உதவியை (USAID) united states agency international development என கூறுவர். இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் USAID நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக இனிமேல் அமெரிக்க உலக நாடுகள் எதற்கும் நிதி உதவி வழங்காது.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவும் நிதி உதவியை பெற்று வந்தது. கடந்த ஆண்டு இந்தியா USAID மூலம் சுமார் 140 மில்லியன் டாலரை பெற்றது. இந்த ஆண்டும் அதை பெற உள்ள நிலையில், தற்போது அது பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இந்தயா இழக்கும். இதனால் சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் படிங்க: இந்தியர்களை நாடு கடத்தும் டிரம்ப்! வெளியான தகவல்
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு
USAID நிதி உதவி மூலம் இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடிந்ததாகவும். பல்லாயிரக்கணக்கான நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு இறப்புகளை தடுப்பட்டதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.
அதேபோல் காசநோயை தடுக்க இந்த USAID நிதி பெரிய அளவு உதவி உள்ளது. எச் ஐ வி-யால் பாதிக்கப்பட்ட மக்களை பராமரிப்பதற்கும் பாதுப்பாப்பதற்கும் இந்த நிதி உதவி உள்ளது. 2007ஆம் ஆண்டில் கூட எய்ட்ஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை 32 % சதவீதம் குறைந்துள்ளது.
கொரானா காலகட்டத்திலும் அமெரிக்காவில் இருந்து USAID நிதி உதவி மூதல் மில்லியன் கணக்கில் இந்தியாவுக்கு நிதி அளிக்கப்பட்டது. இப்படி பல விதத்தில் உதவி வந்த நிதியைதான் தற்போது அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நிறுத்தி உள்ளார். இதனால் இந்தியாவின் சுகாதாரம் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இத்தைய சூழலைக் இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் படிங்க: தென் ஆப்பிரிக்காவுக்கு கிடுக்கிப்பிடி.. மற்ற நாடுகளை எச்சரிக்கிறாரா டிரம்ப்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ