Benefits Of Chanting Kanda Shasti Kavasam : தமிழ் மொழியை வணங்குபவர்களுக்கு, முருகனை தெரியாமல் இருக்காது. முருகனை தெரிந்தவர்களுக்கு, கந்த சஷ்டி கவசம் குறித்து தெரியாமல் இருக்காது. தமிழ் கடவுளாக வழிபடப்படும் முருகனுக்கு, உலகம் முழுவதிலும் அத்தனை கோடி பக்தர்கள் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் பரீச்சியமான ஒரு பாடல், ‘கந்த சஷ்டி கவசம்’. அறிந்தோ, அறியாமலோ பலருக்கு இந்த கந்த சஷ்டி கவசத்தினை சிறு வயதில் இருந்தே படிக்க-பாட தெரிந்திருக்கும். காரணம், பெரும்பாலான இல்லங்களில் இந்த பாடல் மாலை வேளைகளில் சில சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும். அப்போது இதில் சத்ததை அதிகப்படுத்தி வைத்துக்கொண்டு சிலர் விளக்கேற்றுவதுண்டு.
கந்த சஷ்டி கவசம் என்றால் என்ன?
முருகனை பற்றி எண்ணற்ற பக்தி பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பாடல்களுள் ஒன்றுதான், கந்த சஷ்டி கவசம். போர் செல்பவர்கள், கடினமான நாட்களை எதிர்கொள்பவர்கள், தைரியம் வேண்டி முருகனை துதிப்பதுண்டு. ‘கவசம்’என்பது, பாதுகாக்கும் பொருளை அல்லது ஆயுதத்தை குறிக்கும் சொல்லாகும். இந்த பெயர் பொருந்திய இப்பாடல், அனைத்து தீய விஷயங்கள் மற்றும் கெட்ட செயல்பாடுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் என பொருள்படும். இதைத்தான் ஸ்கந்த சஷ்டி கவசம் என்று கூறுகின்றனர். அது பேச்சு வழக்கில் மறுவி, கந்த சஷ்டி கவசம் என்றானது.
நன்மைகள் என்னென்ன?
பாதுகாப்பு: கந்த சஷ்டி கவசத்தை தினமும் காலையில் எழுந்து படிப்பதால், நம்மை சுற்றி இருக்கும் நேர்மறை ஆற்றல்கள் நம்மிடம் வராமல் விலகிப்போவதாக நம்பப்படுகிறது. அது மட்டுமல்ல, விபத்துகள், நோய்கள் ஆகியவற்றில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
தெளிவான சிந்தனை: தினமும் கந்த சஷ்டி கவசத்தை படித்து வந்தால், நமக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதோடு, தெளிவான சிந்தனைகளும் மேம்படும். ஆழ்ந்த மன அமைதியும் உண்டாகும்.
ஆன்மிக ஈடுபாடு: கந்த சஷ்டி கவசம், நம்மை இன்னும் சிறந்த முருக பக்தராக மாற்றுவதுடன், நம்மிடம் இருக்கும் ஆன்மிக சிந்தனையை இன்னும் பெரிதாக மேம்படுத்துகிறது.
சக்தி: கந்த சஷ்டி விழா சமயத்தில், விரதம் இருந்து பலர் இந்த பாடலை படிப்பர். அவர்கள், தங்கள் உடலுக்கும் மனதுக்கும் பெரும் சக்தி உண்டாவதாக அவர்கள் கருதுகின்றனர்.
சவால்களை எதிர்த்து போராட உதவுகிறது: வாழ்க்கை பிரச்சனைகள், மனதில் இருக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்த்து போராட, மன வலிமையை அதிகரிக்க தினமும் எழுந்து கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம்.
சரியாக படிப்பது எப்படி?
முதலில் நன்றாக குளித்து விட்டு, இருக்கும் இடத்தை சுத்தம் செய்து விட்டு, உங்களுக்கு பிடித்த இடத்தில் அமர வேண்டும்.
முருகனின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
பலர், சஷ்டி விழாவின் போது 6 நாள் விரதமிருந்து கந்த சஷ்டி கவசத்தை படிப்பர். இது, உடலையும் மனதையும் தூய்மையாக்குவதாக அவர்கள் நம்புகின்றனர்.
அதிகாலை வேளை, இந்த மந்திரத்தை உச்சரிக்க சரியான வேளை என சிலர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | சக்திவேல் தந்த சக்தி! சக்தி வாய்ந்த வேலால் பகையை வேரோடு வேரறுக்கும் முருகன் வழிபாடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ