Anganwadi Student Requesting Briyani Health Minister Responds : குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கென்று ஆங்காங்கே அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடி மையங்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் கேரளாவிலும் ஒரு அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதில் படிக்கும் ஒரு குழந்தை தான், ரிஜுல் சுந்தர். இவரை ஷங்கு என செல்லமாக சுற்றி இருப்பவர்கள் அழைக்கின்றனர். இந்த குழந்தையின் வீடியோ ஒன்று தற்போது வரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் அந்த கேரளாவை சேர்ந்த சிறுவன், தனது அம்மாவிடம் வாயில் பிரியாணியை வாங்கிக் கொண்டே பேசுகிறான். அதில், தனது அங்கன்வாடி மையத்தில் எப்போதுமே உப்புமா போடுவதாகவும், அதற்கு பதில் பிரியாணி போட வேண்டும் என்றும் கூறுகிறான். மேலும், அவனது அம்மா வேறு என்ன வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை, சிக்கன் பொறித்து தர வேண்டும் என கூறுகிறான்.
அதற்கு அந்த அம்மாவும் சிரித்துக் கொண்டே சரி சொல்லி விடலாம் என கூறுகிறார். இதோட இந்த வீடியோ முடிகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காதது, கேரளாவின் சுகாதார அமைச்சரே, அந்த குழந்தையின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்பதுதான்.
அமைச்சர் வெளியிட்ட வீடியோ:
இந்த குழந்தையின் வீடியோவை கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் பார்த்திருக்கிறார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அவர், குழந்தையின் இந்த கோரிக்கையை தாங்கள் பரிசீலிப்பதாகவும், மாநில அரசு அங்கன்வாடி குழந்தைகளின் சாப்பாட்டு மெனுவை பரிசீரித்து அதில் மாற்றம் ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார். இதனை அந்த குழந்தையின் கோரிக்கையின் பேரில் செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஷ்ங்குவின் இந்தக் கோரிக்கை குழந்தைகளின் கள்ளம் கவலை மற்றும் மனதை வெளிப்படுத்துவதாக கூறி இருக்கும் அவர், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டி அங்கன்வாடியில் பல்வேறு உணவுகள் வழங்கப்படுவதாக கூறியிருக்கிறார். சமீபத்தில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, முட்டையும் பாலும் வழங்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். ஷங்குவின் இந்த கோரிக்கையினால் விரைவில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒரு நாளைக்காவது பிரியாணி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மாரடைப்பால் உயரிழந்த 8 வயது சிறுமி!! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..
மேலும் படிக்க | நேருக்கு நேர் மோதிய பைக்குகள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ