அரசு ஊழியர்களுக்கு பெரிய நிம்மதி... வருகிறதா பழைய ஓய்வூதிய திட்டம்? தமிழக அரசின் முக்கிய அப்டேட்

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது.

Tamil Nadu Government: கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மாநில அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2004இல் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 2003ஆம் ஆண்டுக்கு முன் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தையே (Old Pension Scheme) தொடரே வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
1 /8

மூன்று ஓய்வூதியத் திட்டங்களான பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஒரு குழு அமைத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

2 /8

இதுகுறித்து தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) செய்திகுறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்.1ஆம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

3 /8

அதே வேளையில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது என்றும் அந்த செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 /8

மேலும், அதில் "எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 2003ஆம் ஆண்டு ஏப். 1ஆம் தேதிக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 2025ஆம் ஆண்டு ஜன.24ஆம் தேதி அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

5 /8

எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 /8

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7 /8

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ், பொருளாதாரத்திற்கான உயர்கல்வி நிறுவனமான Madras School of Economics-இன் முன்னாள் இயக்குநர் கே.ஆர்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலாளர் (வரவு செலவு) மற்றும் உறுப்பினர் செயலரான பிரத்திக் தாயள் ஐஏஎஸ் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

8 /8

மேலும், இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் சார்ந்த சிறப்பான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.