AI என்னும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் AI இயங்குதளங்கள் பயன்பாடு குறித்து அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சில ஊழியர்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் AI செயலிகளை (சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவை) பயன்படுத்துகின்றனர். இது இந்திய அரசின் ரகசிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் கசியும் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என்று அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சுற்றறிக்கை
அரசு கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் சாதனங்களில் AI செயலிகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. தரவு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தரவுகளுக்கான அணுகல்கள்
இந்தியாவில் பல வெளிநாட்டு AI செயலிகள் உள்ளன. இதில் ChatGPT, DeepSeek மற்றும் Google Gemini போன்றவை அடங்கும். இந்தியாவில் பலர் தங்கள் வேலையை எளிதாக்கும் நோக்கத்துடன் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். சாதனத்தில் AI செயலிகள் அல்லது கருவிகளை நிறுவிய பிறகு, தேவையான அனுமதிகளுக்கான அணுகலை வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இதன் மூலம், அரசு கோப்புகளின் தரவுகள் கசியும் அபாயம் உள்ளது
AI செயல்படும் விதம்
AI செயலிகள் மற்றும் AI ChatBOT ஆகியவற்றின் உதவியுடன், பலர் உடனடியாக கடிதம், கட்டுரை அல்லது மொழிபெயர்ப்பு போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும். விளக்கக்காட்சிகள் போன்றவற்றை உருவாக்க பலர் இதைப் பயன்படுத்துகின்றனர். இங்கே பயனர்கள் ஒரு எளிய உரை வரியில் கொடுக்க வேண்டும்.
சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய DeepSeek
சீன ஸ்மார்ட்அப் டீப்சீக் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஸ்டார்ட்அப் முயற்சி மிக மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளதன காரணமாக தொழில்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீன ஸ்டார்ட்அப் சுமார் 20 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜனவரி 20, 2025 அன்று, DeepSeek R1 ChatBot திடீரென்று பிரபலமடைந்து பழைய AI நிறுவனங்களின் பல சாதனைகளை முறியடித்தது.
AI பயன்பாடு தொடர்பாக கட்டுப்பட்டை விதித்துள்ள நாடுகள்
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளைக் காரணம் காட்டி, டீப்சீக் செயலிக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுடன் இந்தியா இணைக்கிறது. OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு வருகை தருவதற்கு ஒரு நாள் முன்னதாக, செவ்வாயன்று சமூக ஊடகங்களில் இந்த அறிவுறுத்தல் வெளியானது. அங்கு அவர் தகவல் தொழிநுட்ப அமைச்சர் மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்திக்க உள்ளார்.
மேலும் படிக்க | Deepseek: டீப்சீக் செயலிக்கு தடை விதித்த அரசு... விலகி இருக்க மக்களுக்கு அறிவுரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ