Delhi Exit Poll 2025 Latest News sIn Tamil: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் இருந்து டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இதற்கு முன்னர், கடந்த தேர்தல்களில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் ஆம் ஆத்மி கட்சி கட்சிக்கு சாதகமாக வரவில்லை. ஆனாலும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருந்தனர். இந்த முறை ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆம் ஆத்மி கட்சி மீது சமீபத்தில் வெளியான நெகட்டிவ் கருத்துக்களை வைத்து மற்ற இரு கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க - டெல்லி தேர்தல் 2025: தொகுதி வாரியாக அனைத்து கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியல்!
15 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 2013ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியை பிடிக்க முடியவில்லை. அதே சமயம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவால் 1998க்குப் பிறகு தலைநகரில் பாஜக வெற்றி பெறவில்லை. 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை வென்று இருந்தது. அந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கட்சியை சேர்த்த சிலர் ஊழல் வழக்கில் சிறைக்கும் சென்றுள்ளனர். இவை எல்லாம் ஆம் ஆத்மிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. டெல்லி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் 2025 எப்போது? எங்கு? பார்க்கலாம்
டெல்லி தேர்தல் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. பாஜக 40 முதல் 44 இடங்களும், ஆம் ஆத்மி 25 முதல் 29 இடங்களும், காங்கிரஸ்க்கு 1 இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மதுக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு குறைந்தது தான் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க - டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ