GOAT vs விடாமுயற்சி! ப்ரீ புக்கிங்கில் யார் மாஸ்? அதிக கலக்‌ஷன் யாருக்கு?

Vidaamuyarchi Pre Booking Collection : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? இங்கு பார்ப்போம்.

Vidaamuyarchi Pre Booking Collection : பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் வெளியாக இருக்கிறது. அஜித் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக த்ரிஷா, வில்லனாக அர்ஜுன்-ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பித்து விட்டது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு விஜய்யின் கோட் படமும் வெளியானது. இந்த இரு படங்களில், முன்பதிவில் மாஸ் காட்டிய படம் எது என்பதை இங்கு பார்க்கலாம்.

1 /7

பொங்கலன்று வெளியாக வேண்டிய படம், விடாமுயற்சி. படத்தின் சில பணிகள் தாமதமானதால், இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 6ஆம் தேதி தள்ளிப்போடப்பட்டது. அஜித் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார்.

2 /7

ஆக்‌ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு கருப்பு முடியுடன் தோன்றுகிறார். எனவே, இவருக்கு இதில் இளமையான தோற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

3 /7

அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இது, இவர்கள் இணையும் 4வது படமாகும். இந்த படத்திலிருந்து சவடீகா பாடல் வெளியானது. அது, அஜித்-த்ரிஷாவின் திருமண அல்லது நிச்சயதார்த்த பாடலாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

4 /7

விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருப்பதால், ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படம், புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே 3.35 லட்சம் டிக்கெட்டுகள் விற்றதாக கூறப்படுகிறது. இதனால் புக்கிங்கின் முதல் நாளில் சுமார் ரூ.7 கோடி வரை இப்படம் சம்பாதித்திருக்கிறது. 

5 /7

விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் ப்ரீ புக்கிங்கில் தமிழகத்தில் மட்டும் 18.9 கோடி கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனை, விடாமுயற்சி படம் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 /7

விடாமுயற்சி படத்தின் புக்கிங் இன்னும் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் என்பதால், முன்பதிவில் இன்னும் அதிக வசூலை இதிலிருந்து எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் இணையதளங்களில் கூறி வருகின்றனர்.

7 /7

தி கோட் திரைப்படம் சுமார் 1100 தியேட்டர்களில் வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால் விடாமுயற்சி படம் சுமார் 1000 தியேட்டரில் வெளியாவதாக கூறப்படுகிறது.