PF உறுப்பினர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அதிகரிக்கும் ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்க்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டாக, EPS 95, அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 (Employees Pension Scheme 1995) இன் கீழ் ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 4, 2025, 11:20 AM IST
  • இபிஎஃப் சந்தாதாரர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்த திட்டம்.
  • ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்.
  • இபிஎஸ்-95 ஓய்வூதிய உயர்வு கோரிக்கை.
PF உறுப்பினர்களுக்கு டபுள் ஜாக்பாட்: அதிகரிக்கும் ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் title=

EPFO Update: 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனியார் துறை ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. EPFO ​​(ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டிலும் கணிசமான உயர்வுக்கு உறுதியளிக்கும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இபிஎஃப் மற்றும் இபிஎஸ் குறித்த பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்க்களுக்கு முக்கிய அப்டேட்

இபிஎஃப் உறுப்பினர்க்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டாக, EPS 95, அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 (Employees Pension Scheme 1995) இன் கீழ் ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துவதற்கான திட்டங்களும் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்த திட்டம்

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த புதுப்பிப்புகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய குறிக்கோள். 2025 ஆம் ஆண்டு அமலுக்கு வரும் புதிய EPFO ​​விதிகளில் ஏடிஎம் மூலம் உங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்கும் வசதி, எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறும் வசதி, பங்களிப்பு வரம்புகளை நீக்குதல் போன்ற அம்சங்கள் அடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் ஓய்வூதியத் திட்டத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

EPFO New Rules: இபிஎஃப்ஓ புதிய விதிகள்

திட்டத்தின் பெயர்: EPS-95 (ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995)

தற்போதைய சம்பள வரம்பு: ரூ. 15,000

2025 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட சம்பள வரம்பு: ரூ. 21,000

குறைந்தபட்ச ஓய்வூதியம்: ரூ. 1,000 

கோரப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம்: ரூ. 7,500

அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 7,500 

புதிய வரம்பில்: ரூ. 10,050 வரை

EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு

இபிஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் தங்கள் ஊதுயத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. ஊழியர்கள் டெபாசிட் செய்யும் தொகை முழுவதாக இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில், 8.33% இபிஎஸ் கணக்கிற்கும் 3.67% இபிஎஃப் கணக்கிற்கும் செல்கின்றன. 

Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

EPFO அடிப்படை சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ. 21,000 ஆக உயர்த்த உள்ளது. இதன் தாக்கம் ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருக்கும். இதனால் ஏற்படக்கூடிய மாற்றத்தை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

ஓய்வூதியக் கணக்கீடு: (ஓய்வூதிய சம்பளம் × சேவை ஆண்டுகள்) ÷ 70

எடுத்துக்காட்டு: (ரூ.21,000 × 35 ஆண்டுகள்) ÷ 70 = மாதம் ரூ.10,050 (தற்போதை ஓய்வூதியமான ரூ.7,500 ஐ விட 34% அதிகம்).

மேலும், இதன் மூலம் முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பும் உயரும். ஊதிய உச்சவரம்பு அதிகரிக்கப்பட்ட பின்னர், இனி நிறுவனத்தின் பங்களிப்பு ரூ.15,000 -இல் 8.33% -க்கு பதிலாக ரூ.21,000 -இல் 8.33% ஆக இருக்கும். பிஎஃப் கணக்கில் வைப்புத் தொகை அதிகரிப்பதோடு ஓய்வூதிய நிதியும் வளரும்.

EPFO Pension Hike: இபிஎஸ்-95 ஓய்வூதிய உயர்வு கோரிக்கை

EPS குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்துவருகின்றது. ஜனவரி 10, 2025 அன்று, இபிஎஸ்-95 ஓய்வூதியதாரர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்த முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

- தற்போது சுமார் 36.60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ரூ.1,000 க்கும் குறைவான ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார்கள்.

- பலர் அகவிலைப்படி (DA) இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.

- தொழிற்சங்கங்கள் ரூ.5,000 மாத ஓய்வூதியம் வழங்க பரிந்துரைத்தாலும், ஓய்வூதியதாரர்கள் அது போதாது என்று கருதுகின்றனர்.

- மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என பலத்த கொரிக்கை உள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊழியர்களுக்கு மெகா ஊதிய உயர்வு.... லெவல் 1 முதல் லெவல் 10 வரை, யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

மேலும் படிக்க | குறையப்போகுது EMI... பட்ஜெட் வந்த உடனே மக்களுக்கு அடுத்த ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News