8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட். 2026 ஜனவரி முதல் 8வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் கிடைக்கும். யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்?
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்களை முன்மொழியும் 8வது ஊதியக் குழுவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெவல் 1 முதல் லெவல் 10 வரை உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது உதியக்குழுவின் கீழ் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைத்தது. 8வது ஊதியக்குழுவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இது 2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
தற்போது, 2016 முதல் நடைமுறையில் உள்ள 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி சம்பளம் வழங்கப்படுகிறது. வரவிருக்கும் சம்பளத் திருத்தங்களில் அடிப்படை ஊதியத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்படும் என கூறப்படுகின்றது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்குதல் காரணி. புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படும்போது, அப்போது உள்ள அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படும். இதன் காரணமாக, ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அளவு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
8வது ஊதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால் லெவல் 1 முதல் லெவல் 10 வரையிலான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம்.
லெவல் 1 (Level 1): பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் இந்த வகையின் கீழ் வருகிறார்கள். முன்பு ரூ.18,000 ஆக இருந்த அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.51,480 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக ஊதியம் ரூ.33,480 அதிகரிக்கும். லெவல் 2 (Level 2): இந்த லெவலில் எழுத்தர் கடமைகளுக்குப் பொறுப்பான கீழ் பிரிவு எழுத்தர்களும் அடங்குவர். அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.19,900 லிருந்து ரூ.56,914 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் ரூ.37,014 சம்பள உயர்வு கிடைக்கும்.
லெவல் 3 (Level 3): காவலர்கள் மற்றும் காவல்துறை மற்றும் பொது சேவைகளில் திறமையான ஊழியர்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.21,700 ஆக இருந்தது, ரூ.62,062 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ரூ.40,362 உயர்வு கிடைக்கும். லெவல் 4 (Level 4): இந்த நிலையில் கிரேடு டி ஸ்டெனோகிராஃபர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகள் உள்ளனர். முன்னர் ரூ.25,500 ஆக இருந்த அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.72,930 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மீலம் ரூ.47,430 ஊதிய உயர்வு இருக்கும்.
லெவல் 5 (Level 5): மூத்த எழுத்தர்கள் மற்றும் உயர் மட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆக இருந்தது, ரூ.83,512 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் விளைவாக சம்பளம் ரூ.54,312 உயரும். லெவல் 6 (Level 6): இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த மட்டத்தின் கீழ் வருகிறார்கள். அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.35,400 இலிருந்து ரூ.1,01,244 ஆக உயரும். இது ரூ.65,844 ஊட்ஜிய உயர்வுக்கு வழிவகுக்கும்.
லெவல் 7 (Level 7): இந்த பிரிவில் கண்காணிப்பாளர்கள், பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ44,900. இது ரூ.1,28,414 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரூ.83,514 சம்பள உயர்வு இருக்கும். லெவல் 8 (Level 8): மூத்த பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி தணிக்கை அதிகாரிகள் இந்த நிலையில் ஒரு பகுதியாக உள்ளனர். தற்போது ரூ.47,600 ஆக உள்ள அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,36,136 ஆக உயர்த்தப்படலாம். இது ரூ.88,536 அதிகரிப்பாகும்.
லெவல் 9 (Level 9): இந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகள் அடங்குவர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.53,100, ரூ.1,51,866 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.98,766 சம்பள உயர்வு கிடைக்கும். லெவல் 10 (Level 10): குடிமைப் பணிகளில் தொடக்க நிலை அதிகாரிகள் உட்பட குரூப் ஏ அதிகாரிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். தற்போது ரூ.56,100 ஆக உள்ள அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,60,446 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.1,04,346 என்ற கணிசமான சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) 8வது ஊதியக்குழுவின் நல்ல அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், மாத ஓய்வூதியத்தில் சுமார் 30% அதிகரிப்பு இருக்கலாம். அதாவது குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக உயரும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.