Tamilnadu Crime News Latest Updates: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று (பிப். 3) அதிகாலை மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிசென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா உத்தரவின் பெயரில் குற்றவாளிகளை பிடிக்க ஏடிஎஸ் பி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிகுமார், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் ஆகிய காவலர்கள் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரி என்பவரை சென்னையில் கைது செய்தனர். அப்போது அவரை அங்கிருந்து கொண்டு வரும் வழியில் காவேரிப்பாக்கம் அடுத்த காட்டேரி பகுதியில் சிறுநீர் கழிக்க இறங்கியதாக கூறப்படுகிறது.
குற்றவாளியை காலுக்கு கீழ் சுட்டுப்பிடித்த போலீசார்
அப்போது ஹரி மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளரை தாக்கியதாகவும், அப்போது அருகில் இருந்த ஆய்வாளர் சசிகுமார் தற்காப்புக்காக ஹரியை காலுக்கு கீழே சுட்டு பிடித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லாத நிலையில், உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரர் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரி ஆகியோர் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா? அண்ணாமலை ஆவேசம்!
மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டாா். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரி மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
முன்னதாக, நேற்று (பிப். 3) நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அந்த இரண்டு பேர், இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்தின் மீது வீசி சென்றுள்ளனர். நல்வாய்ப்பாக அவர்கள் வீசிய கண்ணாடி பாட்டிலால் ஆன பெட்ரோல் குண்டு சுவற்றில் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த காவல் துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமூல் பிரச்னைக்கு பழிவாங்கும் செயலா?
மேலும், காவல் நிலையம் மீது மட்டுமின்றி அப்பகுதியில் இருந்த அரிசி கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, சிப்காட் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர், தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் மிரட்டி மாமூல் வாங்குவதாக கூறப்படுகிறது. மாமூல் தர மறுப்பவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், சில நாள்களுக்கு முன் இந்த ரவுடியின் கூட்டாளிகள் அரிசி கடையில் மாமூல் கேட்டு மிரட்டி பிரச்னை செய்துள்ளனர்.
அரிசி கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த ரவடியின் இரண்டு கூட்டாளிகளை கைது செய்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட காவல் நிலையம் மீதும், அரிசி கடை மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள ஹரி யார், அவரின் பின்னணி என்ன என்ற தகவல் கூடிய விரைவில் வெளிவரும்.
மேலும் படிக்க | தளபதி விஜய்யின் சொந்த கிராமம் எங்கு இருக்கிறது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ