Ajith Kumar Salary For Vidaamuyarchi : 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அஜித் நடிக்கும் வெளியாக இருக்கும் படம் விடாமுயற்சி. ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இந்த படம் குறித்த பல தகவல்களை இருக்கும் நிலையில், படக்குழு வாங்கி இருக்கும் சம்பளம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விடாமுயற்சி திரைப்படம்:
தமிழ் திரையுலக ரசிகர்களால் கொஞ்சம் அதிகமாகவே கலாய்க்கப்பட்ட படங்களில் ஒன்று, விடாமுயற்சி. 2023 ஆம் ஆண்டு துளிவு படம் வெளியான போது அதனுடன் சேர்த்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்த படம். ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு அப்டேட் வருவதற்கும் பல மாதங்கள் பிடித்தன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களினால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு வரும் 6ஆம் தேதி, இப்படம் வெளியாக உள்ளது.
அஜித்தின் சம்பளம்:
பொதுவாக, எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் ஹீரோவுக்குதான் சம்பளம் அதிகமாக இருக்கும். காரணம், படம் கதை ஹீரோவை சுற்றி சுழலும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கும். கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், அதிக சம்பளம் வாங்கும் ஸ்டாராகவும் இருக்கிறார். முன்னர் லட்சங்களில் இருந்த சம்பளம், கடந்த 15 ஆண்டுகளில் மடமடவென உயர்ந்து கோடிகளை தொட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தை, லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் நடிக்க, அஜித் சுமார் ரூ.105 கோடி சம்பளமாக வாங்கயிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்து அவர் கமிட்டாகியிருக்கும் படங்களில் அவரது சம்பளம் 150 கோடியை தாண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
த்ரிஷாவின் சம்பளம்:
நடிகை த்ரிஷா, விடாமுயற்சி படத்தில் கயல் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஜித்துடன் த்ரிஷா ஜோடியாக நடிக்கும் 4வது படம் இது. இந்த படத்தில் அஜித்தும் த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். த்ரிஷா, எப்போதும் போல இந்த படத்திலும் பார்க்க இளமையாகவும் அழகாகவும் இருந்தார். இவர், ஒரு படத்திற்கு சுமார் ரூ.10-12 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்திற்காகவும் அவர் 10 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலர், “அஜித் சம்பளத்தில் பாதி கூட த்ரிஷாவுக்கு இல்லையே, இவ்ளோ கம்மியா இருக்கே..” எனக்கூறி வருகின்றனர். விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏன் இந்த சம்பள வித்தியாசம்?
இந்தியாவை பொறுத்தவரை, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை யாரும் அவ்வளவாக விரும்பி பார்ப்பதில்லை. ஒரு மாஸ் ஹீரோ, அவருக்கான 4 சண்டை காட்சிகள், சில பாடல் காட்சிகள் இருந்தால், அதுதான் ‘நல்ல படம்’ எனும் கருத்து இங்கிருக்கும் பலருக்கு உள்ளது. இவர்களுக்கு, சைடில் ரொமான்ஸ் செய்வதற்கு மட்டும் ஒரு நாயகி தேவைப்படுகிறார். இதனால்தான், ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | GOAT vs விடாமுயற்சி! ப்ரீ புக்கிங்கில் யார் மாஸ்? அதிக கலக்ஷன் யாருக்கு?
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் அஜித் டபுள் ஆக்ஷன்?! ட்ரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ