கெட்டி மேளம்: குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி.. பிரிந்து செல்லும் தியா - இன்றைய எபிசோட் அப்டேட்

Episode Update Of Serial Getti Melam : குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி - கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன? இதோ அப்டேட்!  

Written by - Keerthana Devi | Last Updated : Feb 4, 2025, 11:19 AM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
கெட்டி மேளம்: குடும்பத்தோடு கைது செய்யப்படும் துளசி.. பிரிந்து செல்லும் தியா - இன்றைய எபிசோட் அப்டேட்  title=

Episode Update Of Serial Getti Melam : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரம் மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மோனிகா மற்றும் ஜெகன் என இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் குழந்தையைக் கடத்தி விட்டதாகச் சொல்லி துளசி மீது கம்ப்ளைன்ட் கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம் வாங்க. 

kettimelam

நேற்றைய எபிசோட்: ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் கெட்டி மேளம் சீரியலில், நேற்று என்ன நடந்தது தெரியுமா? மோனிகா மற்றும் ஜெகன் என இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் குழந்தையைக் கடத்தி விட்டதாகச் சொல்லி துளசி மீது கம்ப்ளைன்ட் கொடுத்த நிலையில் பலவித திருப்பங்கள் நடக்கிறது. இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இன்றைய எபிசோட் அப்டேட்: அதாவது துளசி வீட்டுக்கு வரும் போலீஸ் இங்கே துளசி யாரு என்று கேட்டு உன்னையும் குழந்தையும் இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு வர சொன்னாரு என்று சொல்ல சிவராமன் மற்றும் லட்சுமி ஆகியோர் எங்க பொண்ணை தனியா அனுப்ப முடியாது என அவளுடன் கிளம்பி வருகின்றனர். 

ஸ்டேஷனுக்கு வந்ததும் இன்ஸ்பெக்டர் இது யாரு உன் குழந்தையா என்று கேட்கத் துளசி ஆமாம் என்று சொல்ல நீ பெத்த குழந்தையா என்று கேட்க சிவராமன் இல்ல ஸ்ரீகாந்த்தோட குழந்தை.. என் பொன்னுக்கும் அவருக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருந்தோம் ஆனால் கல்யாணத்து அன்று ஏற்பட்ட விபத்துல மாப்பிள்ளை இறந்துட்டாரு அதனால குழந்தையை நாங்க கொண்டு வந்து வளர்க்கிறோம் என்று சொல்கிறார். 

kettimelam

இன்ஸ்பெக்டர் அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்குக் கொண்டு போய் வளர்க்க முடியாது.. உங்க மேல இப்போ குழந்தையோட உறவினர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்ல மோனிகா மற்றும் ஜெகன் ஆகியோர் என்ட்ரி கொடுக்கின்றனர். சொத்துக்காக ஆசைப்பட்டு குழந்தையை கூட்டிட்டு போய் விட்டதாக சொல்ல இன்ஸ்பெக்டர் குழந்தையை இவர்களிடம் இருந்து பிரித்து மோனிகா, ஜெகனிடம் ஒப்படைக்கிறார்.

பிறகு லட்சுமி மற்றும் சிவராமனைச் சிறைக்குள் அடைக்கின்றனர். இனிமே அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அந்த குழந்தையைப் பார்க்க மாட்டேன், பேசமாட்டேன் என எழுதி கையெழுத்துப் போட்டால் தான் உங்க அப்பா அம்மாவை விடுவேன் என இன்ஸ்பெக்டர் துளசிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். வேறு வழியில்லாமல் துளசி கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். 

kettimelam

இருந்ததிலும் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் சிவராமனை வெளியே விடாமல் போட்டு அலைக்கழிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறியக் கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் பாருங்கள்.

மேலும் படிக்க | விடாமுயற்சி: அஜித் சம்பளம் 105 கோடி! த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா? எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | GOAT vs விடாமுயற்சி! ப்ரீ புக்கிங்கில் யார் மாஸ்? அதிக கலக்‌ஷன் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News