டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று, பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்களிக்க வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 220 துணை ராணுவப் படையினர், 35626 டெல்லி காவல்துறையினர், 19000 ஊர்க்காவல் படையினர் மற்றும் 3000 சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | அரசு அங்கன்வாடியில் பிரியாணி கேட்ட குழந்தை-உடனே பதிலளித்த அமைச்சர்! வைரல் வீடியோ..
ஆம் ஆத்மி கட்சி
கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை வென்று பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்து, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி 2015 தேர்தலில் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியது. அந்த தேர்தலில் 67 இடங்களை வென்று தலைநகரில் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. 2020 தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி தொடர்ந்தது, 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டனர்.
ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள்
ஆம் ஆத்மி கட்சி பல முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. மின்சார மானியங்கள், அரசு பள்ளிகளின் மேம்பாடுகள் மற்றும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பொது நலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. இந்த முன்முயற்சிகள் மக்களிடையே கணிசமான கவனத்தையும் ஆதரவையும் பெற்றன. இதனால் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் இதே போன்ற திட்டங்களை வாக்குறுதியளிக்க அளித்தன.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இந்த தேர்தலில் வெற்றியை பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தயாராகி வருகின்றனர். தங்கள் அரசின் சாதனைகளை முன்னிலைப்படுத்தியும், மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களைக் கோடிட்டு காட்டியும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் 25 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சியும், 2013க்கு முன் 15 ஆண்டுகள் தலைநகரில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் டெல்லி சட்டசபையில் நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளன.
1990களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 2013க்குப் பிறகு டெல்லித் தேர்தலில் வெற்றிபெறவில்லை. அதே சமயம் 1998க்குப் பிறகு தலைநகரில் பாஜக வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். முந்தைய 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது, அந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. மேலும் காங்கிரஸ் கட்சியால் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும், இந்த தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சிக்கு சில மோசமான விஷயங்கள் நடந்தது. டெல்லி மதுக் கொள்கை ஊழல் மற்றும் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ