அழகு என்பது பார்ப்பவர் கண்களின் தான் இருக்கிறது என்று சொல்வார்கள். அது உண்மை தான் என்றாலும், பொதுவாக சமூகத்தில் அழகு என்பதற்கான வரையறையை கடைபிடிக்கவே அனைவரும் விரும்புகின்றனர். அது உணவாக இருந்தாலும் சரி, உடை, வீடு என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். இவற்றில் முக்கியமானது அழகான தோற்றம். அழகு என்பதற்கான வரையறைகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.
அழகுப்படுத்தல்
அழகுக்கான வரையறை என்பது மாறிக் கொண்டேயிருந்தாலும் முக அழகையும் உடல் அழகையும் பராமரிப்பதில் யாரும் சோம்பல்படுவதில்லை. ஆனால், அழகுபடுத்திக் கொள்வதற்கான செலவுகளும், பக்கவிளைவுகளும் தான் கொஞ்சம் தயங்க வைக்கிறது.
தேவையில்லாத முடிகள்
அதிலும் உடலில் பல இடங்களிலும் வளரும் தேவையில்லாத முடிகள் அழகை மட்டுப்படுத்தும் என்பதால், தேவையில்லாத முடிகளை அகற்றுவது என்பது அடிக்கடி செய்ய வேண்டிய வேலையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முகத்தில் வளருக்கும் அதிகப்படியான முடிகளை நீக்குவது அடிக்கடி செய்ய வேண்டிய செலவு பிடித்த ஒரு செயல் என்று சொல்லலாம்.
தலைமுடி வளரவில்லை என்று அனைவரும் கவலைப்படும் அதேநேரத்தில், உடலின் பிற பாகங்களில் தேவையில்லாமல் ஏன் முடி வளர்கிறது என்று சலித்தும் கொள்கின்றனர். அந்த வகையில் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில் உடல் முடியை அகற்ற உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன
DIY முறைகள்
நமக்கு நாமே செய்துக் கொள்ள முடிந்த வேலைகளை Do it yourself எனப்படும் DIY methods மூலம் செய்துக் கொள்கிறோம். அதன்படி தேவையில்லாத முடிகளை அகற்ற நாமே செய்து கொள்ளக்கூடிய வீட்டு வைத்தியங்கள் சருமத்தையும் மென்மையாக்கும்.
முடி அகற்ற வீட்டு வைத்தியம்
முடி அகற்றுதல் என்பது அழகுக்கலை நிபுணரால் செய்யப்படும் போது, பெரும்பாலும் வலிமிகுந்த செயலாகும். பெரும்பாலானவர்கள் மெழுகு அல்லது த்ரெடிங் மூலம் தங்கள் உடலில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர். இதைத்தவிர, ஷேவிங் உட்பட பல வழிமுறைகள் இருந்தாலும், சருமத்திற்கு பாதிப்பு இல்லாமல் மென்மையாக பராமரிக்கும் வீட்டு வைத்தியங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை
சர்க்கரையில் எலுமிச்சை சாறை கலந்து, பேஸ்ட் கெட்டியாகும் வரை சூடாக்க வேண்டும். வெதுவெதுப்பான பிறகு, இந்தக் கலவையை முடி வளர்ச்சியின் திசையில் அதை பூசிய உடனே, ஒரு பருத்தித் துணியை அதன்மேல் வைத்து அழுத்தி, முடி வளர்ச்சிக்கு எதிர் திசையில் ஒரு முறை இழுக்கவும். இப்படி தொடர்ந்து செய்தால் முடி இல்லாத மென்மையான அழகான சருமம் கிடைக்கும்.
மஞ்சள் மற்றும் பால்
மிகவும் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள பேஸ்ட்டை உருவாக்கி உடலில் உள்ள அதிகப்படியான முடிகளை அகற்றவும். மஞ்சள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகிறது, பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டும் கலந்த கலவையானது, சருமத்தில் உள்ள முடிகளை அகற்றுவதுடன் பொலிவையும் கூட்டும்.
இந்த இரண்டையும் கலந்து, முடியை அகற்ற விரும்பும் பகுதி/கள் மீது இதைப் பயன்படுத்துங்கள். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் தெரியும்.
கடலை மாவு மற்றும் தயிர்
தோல் பராமரிப்பிற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கலவை இது. கடலை மாவை தயிருடன் கலந்து பேஸ்ட் செய்யவும். இதை தோலில் தடவி, அது காய்ந்து போகும் வரை விடவும். பின்னர் அதை மெதுவாக முடி வளரும் திசையில் தேய்த்து எடுக்கவும். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி சுத்தம் செய்யவும்.
ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்
இது ஒரு அற்புதமான கலவையாகும், ஓட்ஸ் சருமத்திலிருந்து முடியை வெளியேற்றினால், வாழைப்பழம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொண்டு, அந்தக் கலவையை, கைகள் மற்றும் கால்கள் உட்பட எங்கிருந்து முடியை அகற்ற விரும்புகிறீர்களோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள். சிறிது நேரம் மசாஜ் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ