சனி பெயர்ச்சி 2025: கர்மத்திற்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், வரும் மார்ச் மாதம் 29ம் தேதி, பெயர்ச்சியாகும் நிலையில், அதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி அஸ்தமனம் ஆகிறார்.
நவகிரகங்களில், மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி கிரகம். சனி எந்த ராசியில் பெயர்ச்சியாகிறது என்பதை வைத்துதான், ஏழரை நாட்டு சனியின் பாதிப்பும் அதன் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சனி பெயர்ச்சி மட்டுமல்லாது, அதன் அஸ்தமனம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, அஸ்தமனம், உதயம் என அனைத்து முக்கியத்துவம் பெறுகிறது.
சனீஸ்வரன்: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். எனவே 12 ராசிகள் சுற்றி முடிக்க 30 ஆண்டுகள் ஆகிறது.
சனிப்பெயர்ச்சி 2025: சனிபகவான் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்கு முன்பாக, பிப்ரவரி 28ஆம் தேதி மாலை மணி 7.01 நிமிடங்களுக்கு கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார்.
சனி அஸ்தமனம்: வரும் பிப்ரவரி 28ஆம் தேதி, அஸ்தமனம் ஆகும் சனி பகவான், 37 நாட்களுக்கு அஸ்தம நிலையில் இருப்பார். பின்னர் ஏப்ரல் மாதம், 6ம் தேதி உதயமாகிறார்.
அதிர்ஷ்ட ராசிகள்: சனியின் அஸ்தமனம் சில ராசிகளுக்கு, வாழ்க்கையில் அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்றும், வாழ்க்கையில் சந்தித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மை பிறக்கும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ரிஷப ராசியினருக்கு சனியின் அஸ்தமனம் நேர்மறை ஆற்றலை கொண்டு வந்த சேர்க்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு பொருளாதாரம் நிலையை உயர்த்தும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.
தனுசு ராசியினருக்கு சனியின் அஸ்தமனம், மிகவும் எதிர்பார்த்த சாதகமான பலன்களை கொண்டு வந்து தரும். பண வரவுகளால் வாழ்க்கையில் ஆடம்பரம் பெருகும். வேலை நிமித்தமாக பயணம் செய்யலாம். இது ஆதாயங்களை கொண்டு வந்த சேர்க்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
கும்ப ராசியினருக்கு சனியின் அஸ்தமனம், காரணமாக இன்னல்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பிறக்கும். நிதிநிலைமை வலுவடையும். எண்ணிய காரியம் அனைத்தும் நிறைவேறும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.