Vidaamuyarchi FDFS: விடாமுயற்சி வீண் முயற்சியா? மங்காத்தா மாதிரி இருக்கா? X நெட்டிசன்கள் விமர்சனம்

Vidaamuyarchi FDFS: சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் X விமர்சனத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2025, 10:54 AM IST
  • தமிழ்நாட்டில் விடாமுயற்சி முதல் காட்சி, காலை 9 மணிக்குதான்.
  • இருப்பினும் வெளிமாநிலங்களில் காலை 6.05 மணிக்கே வெளியாகிவிட்டன.
  • இதனால், அங்கிருந்து X தளத்தில் சிலர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
Vidaamuyarchi FDFS: விடாமுயற்சி வீண் முயற்சியா? மங்காத்தா மாதிரி இருக்கா? X நெட்டிசன்கள் விமர்சனம் title=

Vidaamuyarchi FDFS X Review: நடிகர் அஜித் குமார் நடிப்பில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அவரது விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் திரையரங்கில் இருந்தது. அதன் பின்னர் சுமார் 2 ஆண்டுகளாக அவருக்கு படங்கள் ஏதும் வெளியாகாததால், அவரின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

Vidaamuyarchi FDFS: பண்டிகை போல் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்தாலும், இன்று விடாமுயற்சி திரைப்பட ரிலீஸை நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விடாமுயற்சி ரிலீஸை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Live: வெளியானது விடாமுயற்சி... விமர்சனமும் வந்தாச்சு... IND vs ENG முதல் ஓடிஐ போட்டி - உடனடி அப்டேட்ஸ்

Vidaamuyarchi FDFS: விடாமுயற்சி முதல் காட்சி வெளியானது

இருப்பினும் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களுக்கு விடாமுயற்சி படத்தை காண சென்றுள்ளனர் எனலாம். அங்கு காலை 6.05 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆந்திராவின் நகரி, கேரளாவின் திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தமிழ் படங்களை காண்பதும் தற்போது டிரெண்ட் ஆகிவிட்டது.

Vidaamuyarchi FDFS: X நெட்டிசன்கள் விமர்சனம் 

இந்நிலையில், தமிழ்நாட்டில் படம் இறங்கும் முன்னர் படத்தின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் வெளியாகிவிடுகின்றன. அந்த வகையில், விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் காட்சியின் முதல் பாதி தற்போது நிறைவடைந்திருக்கும் வேளையில் நெட்டிசன்கள் பலர் விடாமுயற்சி குறித்து அவர்களது X தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றை இங்கு வரிசையாக காணலாம்.

Vidaamuyarchi X Review: 'விடாமுயற்சி - வீண் முயற்சி'

Christopher Kanagaraj என்ற X தள பயனர், 1 லட்சத்திற்கும் பாலோயர் வைத்திருக்கும் அந்த நபர் விடாமுயற்சி திரைப்படம் மொத்தமாக ஏமாற்றளிப்பதாக தெரிவித்துள்ளார். அவரது தனது X பக்கத்தில், விடாமுயற்சி திரைப்படம் வீண் முயற்சி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அவரது மற்றொரு பதிவில்,"அஜித்தின் திரை தோற்றம் அருமையாக உள்ளது. அஜித் - திரிஷா காதல் காட்சிகள் சுவாரஸ்யமற்ற இருக்கிறது. இசை ஓகே, பாட்டு நன்றாக உள்ளது. அஜர்பைஜானின் நிலப்பரப்பு சார்ந்த காட்சிகள் சிறப்பு.

ஆனால், பலவீனமான கதை, எவ்வித உணர்ச்சிகளும் இன்றி, திருப்பங்களும் இன்றி, சுவாரஸ்யமற்று, தட்டையாக உள்ளது. மெதுவான கதை சொல்லல். ஸ்டைலாக இருக்கிறது, ஆனால் ஒன்றுமே இல்லை. மொத்தமாக ஏமாற்றம்" என பதிவிட்டுள்ளார். மேலும், X தளத்தில் பிரபல திரைப்பட விமர்சகராக அறியப்படும் Manobala Vijayabalan (@ManoBalav) இன்னும் சிறப்பாக எதிர்பார்த்தேன் என பதிவிட்டுள்ளார். இருப்பினும் அவர் விடாமுயற்சியை குறிப்பிடுகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. 

Vidaamuyarchi X Review: 'விடாமுயற்சி ஓரளவு நன்றாக இருக்கிறது'

அதிலும், @Venkyreviews என்ற கணக்கில், சுமார் 6.31 மணிக்கு முதல் பாதியின் விமர்சனமும், காலை 7.35 மணிக்கு முழு படத்தின் விமர்சனமும் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இதன் நம்பகத்தன்மையை நாங்கள் உறுதிசெய்யவில்லை என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம். விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பித்தில் மெதுவாக இருந்தாலும் பின்னர் எதிர்பார்க்காத திருப்பங்களால் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் முதல் பாதி ஓரளவுக்கு நன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முழு படத்திற்கான விமர்சனத்தில்,"விடாமுயர்ச்சி, ஒரு சாதாரணமான ஆக்‌ஷன் த்ரில்லர். சுவாரஸ்யமான கதைக்களத்தையும், சில நேர்த்தியான திருப்பங்களையும் கொண்டுள்ளது. ஆனால் மிகவும் மெதுவாக இருப்பதால், சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அடிப்படை கதைக்களம் சில திருப்பங்களுடன் வருகிறது. மேலும் இயக்குநர் கதையை நேர்த்தியாக சொல்லியிருந்தார், தேவையற்ற வணிக கூறுகளை தவிர்த்திருந்தார். இருப்பினும், அதை ஒரு வேகமான முறையில் விவரிக்கத் தவறிவிட்டார். இது படம் பார்க்கும் அனுபவத்தைத் தடுக்கிறது.

படம் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டுள்ளது மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் இசை தரமாக இருக்கிறது. அஜித் நன்றாக இருக்கிறார், ஆனால் அவரது நட்சத்திர முகத்தை காண இதில் அதிக இடம் இல்லை" என பதிவிட்டு Just Ok என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும். 5க்கு 2.5 ரேட்டிங் கொடுப்பதாக பதிவிட்டுள்ளார்.

Vidaamuyarchi X Review: அமெரிக்காவில் இருந்து வந்த விமர்சனம்...?

@CalmBanker என்ற கணக்கில் இருந்து, அமெரிக்காவில் இருந்து தனது நண்பர் சொன்னதாக ஒரு விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில் படம் சிறப்பாக இருப்பதாகவும், ஹாலிவுட் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அஜித் குமாரின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் X கணக்கின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படவில்லை. அமெரிக்காவில் இன்று காலை 5 மணியளவில் படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது 

மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?

மேலும் படிக்க | விடாமுயற்சி: அஜித் சம்பளம் 105 கோடி! த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா? எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News