Lokesh Kanagaraj Movie Line Ups : தமிழ் திரையுலகில் வெகு சில படங்களில் இயக்கியிருந்தாலும் தற்போது டாப் இயக்குனராக விளங்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது படம் ஒவ்வொன்றும் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன. இவர் அடுத்து இயக்கவிருக்கும் படங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ரசிகர்களுக்கு ஆவல் எழுந்துள்ளது.
கூலி திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ்-ரஜினி முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் கூலி. இந்த படத்தில் ரஜினி தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதை இதன் டைட்டில் டீசரே கூறிவிட்டது. இந்த படத்தில் ரஜினி வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படத்தில், ரஜினியுடன் சேர்த்து சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உப்பேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து இயக்க இருக்கும் படங்கள்!
லோகேஷ் கனகராஜ், கூலி படத்தை முடித்தவுடன் கைதி 2 பட வேலைகளில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர், தனது பிற படங்களை எடுத்துக்காெண்டிருக்கும் போதே, கைதி 2 படத்தின் சில ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளையும் அவர் முடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கைதி 2 படத்தை முடித்த பிறகு பான்-இந்திய நட்சத்திரமான பிரபாஸ் உடன் லோகி கைக்கோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அட்வான்ஸ் வழங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், இதில் ஒரு சிக்கல் உள்ளது. லோகி தனது பட வேலைகளை முடிக்கும் போது, பிரபாஸ் அந்த நேரத்தில் பிசியாக இருந்தால் ஒன்றும் செய்ய இயலாதாம். ஒரு வேளை அது தாமதமானால், தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க லோகி திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்கிடையில், சிவகார்த்திகேயனும் தன்னை வைத்து ஒரு படத்தை இயக்குமாறு லோகியிடம் கடந்த 2 வருடங்களாக கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, முதலில் கூலி படத்தை முடிக்கும் லோகி, அடுத்து கைதி 2 படத்தை இயக்கிவிட்டு, பின்னர் பிரபாஸ் உடன் இணைவதா, அல்லது தனுஷ் உடன் இணைவதா என முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படப்பிடிப்பு எந்த அளவில் உள்ளது?
கூலி திரைப்படம், கண்டிப்பாக LCU-வில் இல்லை அது ஒரு தனிப்பட்ட கதை என்பதை லோகேஷ் கனகராஜ் முன்கூட்டிய கூறிவிட்டார். இருப்பினும் இந்த படத்தில் எக்கச்சக்க முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், கூலி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. தொடர்ந்து, விசாகப்பட்டினர், சென்னை, ஜெய்பூர் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு கட்டமாக படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், கூலி படத்தில் இருந்து நாகார்ஜுனாவின் சண்டை காட்சி ஒன்று லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைக்கொடுக்குமா கூலி?
லோகி, கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், ஒரு தரப்பினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. திரைக்கதை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருந்தே படத்தின் கதையை கணிக்க முடிந்ததாகவும் சிலர் கூறி வந்தனர். இப்போது, கூலி படத்திலும் அதே நிலை தொடரக்கூடாது எனும் நோக்கில் லோகி மிகவும் உஷாராக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | கூலி: ரஜினிக்கு மகளாக நடிக்க இருந்த 31 வயது நடிகை! ஸ்ருதிஹாசன் இல்லை-வேறு யார்?
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த பட ஹீரோ! ‘இந்த’ 41 வயது நடிகர்தான்..யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ