சீலிங் பேனில் அதிக தூசி உள்ளதா? எளிதாக சுத்தம் செய்வது எப்படி?

உங்கள் சீலிங் ஃபேன்களை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் சிரமப்பட்டிருந்தால், பின்வரும் இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

1 /6

வீட்டில் உள்ள சீலிங் பேன்களை அடிக்கடி நாம் சுத்தம் செய்ய மாட்டோம். இதன் விளைவாக அவற்றில் கணிசமான அளவு தூசி மற்றும் அழுக்குகள் சேர்ந்திருக்கும்.

2 /6

இதனால் அவற்றை சுத்தம் செய்வது ஒரு பெரும் பணியாக உணரலாம். இது போன்ற சிக்கலில் நீங்களும் இருந்தால் சுத்தம் செய்யும் செயல்முறையை எளிதாக்கும் சில நடைமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.

3 /6

தலையணை உறைகளைப் பயன்படுத்துவது பேனில் உள்ள தூசியை துடைக்க ஒரு சிறந்த முறையாகும். இதன் மூலம் சுத்தம் செய்யும் போது உங்கள் முகத்தில் தூசி படியாமல் இருக்கும்.

4 /6

பழைய சாக்ஸ் சீலிங் பேனை சுத்தம் செய்ய உதவும். சாக்ஸை தண்ணீரில் ஊற வைத்து பிறகு சாக்ஸின் இரு முனைகளிலும் பிடித்துக்கொண்டு பேனின் பிளேடுகளை எளிதாக துடைக்கலாம்.

5 /6

உங்கள் வீட்டில் காப்வெப் பிரஷ் இருந்தால் சீலிங் பேனை துடைப்பது மிகவும் எளிது. அவற்றை உங்களுக்கு வேண்டிய முறையில் திருப்பி வைத்து கொண்டு துடைத்து கொள்ள முடியும்.  

6 /6

வீட்டில் நீளமான குச்சிகள் இருந்தால் உங்கள் மூக்கு மற்றும் வாயை ஒரு துணியால் கட்டிக்கொண்டு கையில் இருக்கும் குச்சியைக் கொண்டு சீலிங் ஃபேனின் பிளேடுகளை துடைக்கலாம்.