Kanye West Wife Bianca Censori Transparent Dress : ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே கிடையாது. குறிப்பாக ஒரு சில பிரபலங்கள் முக்கியமான விழா நடக்கும் சமயங்களில் கூட, இங்கிதம் இல்லாமல் நடந்து கொண்டு பின்னர் நாளிதழ்களில் தலைப்பு செய்திகளாவது உண்டு. அதற்குப் பெயர் போன பிரபலம், கான்யே வெஸ்ட். இவரது மனைவி சமீபத்தில் கிராமி விருது விழாவில் அணிந்து வந்த ஆடை குறித்து தான் உலகம் முழுவதும் பேச்சாக உள்ளது.
கிராமி விருதுகள்:
ஆங்கில இசை துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடத்தப்படும் விருது விழாதான், கிராமி விருதுகள். இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் விழா சமீபத்தில் நடந்தது. இதில் உலக அளவில் பிரபலமான இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர். இதில் சிகப்பு கம்பள வரவேற்பும் நடக்கும். அப்போது அங்கிருக்கும் பிரபலங்கள், தங்களின் வித்தியாசமான ஆடைகளை புகைப்படம் எடுப்பதற்காக காண்பிப்பது வழக்கம். ஆனால், யாரும் இதுவரை செய்யாத ஒரு செயலை ஒருவர் செய்திருக்கிறார்.
டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து வந்த பிரபலம்..
ஆங்கில இசை துறையில் பிரபல ஆங்கில ராப் பாடகராக விளங்குபவர் காணிய வெஸ்ட் (Kanye West). இவர், தனது மனைவி பியாங்கா சென்சாரியுடன் (Bianca Censori) கிராமிய விருது விழாவுக்கு வந்திருந்தார். இங்கு சிகப்பு கம்பில வரவேற்பில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது, அவரது மனைவி கருப்பு நிற முழு கோட் அணிந்து வந்தார். பின்னர் தன் அந்தக் கோட்டை கழட்டி அவர் கீழே போட்ட பின் அனைவருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம், பியாங்கா, உள்ளே இருப்பது வெளியே தெரியும் டிரான்ஸ்பரன்ட் ஆடையை அணிந்து வந்திருந்தார். இதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகினர்.
Kanye West and Bianca Censori converse before Censori drops her coat on the #Grammys red carpet pic.twitter.com/4fG8VbQhAO
— The Hollywood Reporter (@THR) February 4, 2025
பியாங்கா, தனது கணவரின் சொல்படி இந்த ஆடையை அணிந்ததாக கூறப்படுகிறது. பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், உலகம் முழுக்க தன்னை பற்றி பேச வேண்டும் என்பதற்காகவும் கான்யே வெஸ்ட், இவ்வாறு தனது மனைவியை செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் நினைத்தது நடந்து தான் இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக Kanye West மற்றும் Bianca Censori யார் என்பதை தெரிந்து கொள்ள உலகம் முழுவதும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். Google தேடுதளத்தில் இவர்கள் அதிகம் தேடப்பட்ட மனிதர்களாகவும் இருக்கின்றனர்.
புத்தகம் எழுதுகிறாராம்…
தனது மனைவி குறித்து Kanye West ஒரு புத்தகம் எழுதுவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த புத்தகத்தின் பெயர் “Wife By Husband” எனக் கூறப்படுகிறது. இதற்காக கதை எழுதுபவர்கள், படம் வரைபவர்கள், புத்தகத்தை பிரிண்ட் செய்பவர்கள் என பல தரப்பட்ட குழுவை அவர் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புகார் தெரிவிக்கப்படுமா?
அமெரிக்காவில், ஆடை சுதந்திரம் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமையாக பார்க்கப்படுகிறது. ஆனால், கான்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி செய்த வேலை, ஒரு படி மேலே சென்று விட்டதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு விருது விழாவில் இவ்வாறான செயல் செய்ததற்காக பலர் இவர்களுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால், இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
ஒரு சிலர் இந்த விஷயத்தை, சமூக சீர்கேடான விஷயமாக பார்த்து வர, ஒரு சிலர் இதனை ‘Fashion’ அடையாளமாக பார்த்து வருகின்றனர். ஆனால், உலகளவில் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது என்னவோ, உண்மைதான்.
மேலும் படிக்க | அனாவசியமாக பேசி அடிவாங்கிய பூஜா ஹெக்டே! அப்படி என்ன பேசினார் தெரியுமா?
மேலும் படிக்க | சர்ச்சை வீடியோவில் இருப்பது உண்மையில் ஓவியா தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ