Makkal Kurai Theerkkum Naal: "ஓய்வூதர்கள் குறைதீர்ப்புக் கூட்டம்" ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Pensioners Latest News In Tamil: திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 13 (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறக்கூடிய வகையில் அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளும் சலுகை வழங்குவது குறித்தும் தகவல்கள் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது குறைகளை தீர்க்கும் வண்ணம் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு நடைபெறக்கூடிய குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை "ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்" நடைபெறுவதற்கு முன்பாக மனுவாக தெரிவிப்பதற்கு காலவகாசம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் குறிப்பிட்ட அந்த தேதிக்குள் தங்களது முறையீடுகளை கட்டாயம் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 13 (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் என்பது மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை கருவூலம் மற்றும் கணக்குத் துறை கூடுதல் இயக்குனர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாக பணிபுரிந்த துறை, அல்லது அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், கொடுப்பாணை எண், பெறப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தங்களது தொலைபேசி அல்லது கைபேசி எண்ணுடன் இரண்டு பிரதிகளில் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் விண்ணப்பம் வாயிலாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மோனா பூங்குடி அவர்கள் தெரிவித்துள்ளார்.