41 கிலோவை குறைத்த பெண்... அதுவும் 15 மாசத்தில் - அவர் சாப்பாட்டில் செய்த பெரிய மாற்றம்!

Weight Loss Journey: பெண் ஒருவர் 15 மாதங்களில் 41 கிலோ உடல் எடையை தான் எப்படி குறைத்தேன் என்பதை விவரித்து அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2025, 02:38 PM IST
  • அந்த பெண் உடற்பயிற்சி பயிற்றுநராக உள்ளார்.
  • அவர் உடல் எடையை குறைக்க 3 விஷயங்கள் முக்கியம் என்கிறார்.
  • உடல் எடையை அதிகரிக்காமல் இருக்கவும் சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
41 கிலோவை குறைத்த பெண்... அதுவும் 15 மாசத்தில் - அவர் சாப்பாட்டில் செய்த பெரிய மாற்றம்! title=

Weight Loss Journey: உடல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியமில்லை எனலாம். உடல் எடையை குறைப்பது வரம் என்றால், நீங்கள் நீண்ட நெடிய தவம் இருக்க வேண்டும்.

தற்போது பலரும் உடல் பருமன் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் என்பது இதய நோய், நீரிழிவு உள்ளிட்ட உடல்நிலை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றாலும், சிலருக்கு தன்னம்பிக்கையை குறைக்கும் காரணியாகவும் உள்ளது. உணவுமுறையில் கட்டுப்பாடு, தீவிரமான உடற்பயிற்சி, சிறப்பான தூக்கம் ஆகியவை உடல் எடை குறைப்புக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Weight Loss Journey: குறைந்த கன்னக் கொழுப்பு

தற்போது பலரும் உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. அவர்கள் உடல் எடை குறைப்பு சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன என்பதை அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு வருவதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.  பெரும்பாலும் உடல் எடையை குறைய தொடங்கும்போது முகம், கன்னம், தாடைப் பகுதிகளில்தான் முதலில் குறையும். இதையும் பலர் குறிப்பிடுவார்கள்.

மேலும் படிக்க | 85 கிலோ அப்போ, 58 கிலோ இப்போ...! இஞ்சி இடுப்பழகுக்கு அந்த பெண்ணே சொல்லும் 5 டிப்ஸ்

Weight Loss Journey: 15 மாதங்களில் 41 கிலோவை குறைத்த பெண்

அந்த வகையில், கனடாவில் இருக்கும் சாச்சி பை (Saachi Pai) என்ற  உடற்பயிற்சி பயிற்றுநர் தனது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அதில் அவர் 15 மாதங்களில் 40.8 கிலோவை குறைத்த அனுபவத்தையும் கூறியிருந்தார். முதலில் முகத்தில் கன்னக் கொழுப்பு அதிகமாகவும், தாடைக்கோடு தெரியாத வகையில் இருந்ததாகவும், அது தற்போது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த வீடியோவில் தனது உடல் எடை குறைப்பு அனுபவத்திற்கு என்னென்ன வழிமுறைகள் உதவியது என்பதை இங்கு காணலாம்.

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க முக்கிய 3 விஷயங்கள்

மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பாலோயர்களுக்கு உடல் எடையை குறைக்க 3 விஷயங்களை பரிந்துரைகிறார். அதாவது, தினமும் அதிகளவிலான புரதச்சத்தை, குறைந்த அளவிலான கலோரிகளுடன் எடுக்க வேண்டும் என்றார். மேலும், உடலுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகள், கார்டியோ, பேலன்ஸ் பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்றார். அதுமட்டுமின்றி நிதானமாக உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்பதும் முக்கியமான அறிவுரையாக உள்ளது.

Weight Loss Journey: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க...

இதுமட்டுமின்றி உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் சில டிப்ஸ்களை அவர் வழங்கினார். கண்டிப்பாக துரித உணவுகளை தொடவே கூடாது, அவை வீட்டில் இருந்தாலும் தூக்கி வீசிவிடுங்கள் என்கிறார். மேலும், வெளியில் சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்கிறார்.

மேலும், குளிர்பானங்கள், மதுபானம், இனிப்பு கலந்த காபி, டீ ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். அதுமட்டுமின்றி, முடிந்தளவு ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிடும்படி கூறினார். உதாரணத்திற்கு சாச்சி பாய் காலை உணவாக கிரீக் யோகர்ட் + பழங்கள் + புரோட்டீன் ஷேக் அல்லது அவகாடோ டோஸ்ட் + முட்டை ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவாராம். மேலும், மதியம் மற்றும் இரவு உணவை முடிந்தளவு தவிர்க்கும்படியும் அவர் கூறுகிறார். இதனை தொடர்ந்து செய்தால் உடல் எடையை குறைக்கலாம் என அவர் கூறுகிறார்.

(பொறுப்பு துறப்பு: சாச்சி பாய் கூறியவை அனைத்தும் அவரது உடல் எடை குறைப்பு சார்ந்த அனுபவம் மட்டுமே. இதனை நீங்கள் பின்பற்றுவதற்கு முன் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | 100 நாள்களில் 24 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைத்த காலை உணவு என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News