மருத்துவர்களின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி.. நோயாளிகளுக்கு நியாயம் கிடைக்க அதிரடி நடவடிக்கை

நாட்டில் அலட்சியமாக இருக்கும் மருத்துவர்களுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளின் கரங்கள் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முடிவில், மருத்துவர்களுக்கு எதிராக நோயாளிகள் புகார் அளிக்கும் வசதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 5, 2025, 01:36 PM IST
  • மருத்துவர்களின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி.
  • நோயாளிகள் மேல்முறையீடு செய்யும் வசதி.
  • மருத்துவத் துறையில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் அதிகரிக்கும்.
மருத்துவர்களின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி.. நோயாளிகளுக்கு நியாயம் கிடைக்க அதிரடி நடவடிக்கை title=

நாட்டில் அலட்சியமாக இருக்கும் மருத்துவர்களுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளின் கரங்கள் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முடிவில், மருத்துவர்களுக்கு எதிராக நோயாளிகள் புகார் அளிக்கும் வசதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. இப்போது நோயாளிகள், சிகிச்சையில் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆணையத்திடம் நேரடியாக புகார் அளிக்க முடியும்.

மருத்துவப் பதிவு வாரியத்தில் மேல்முறையீடு

தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission NMC) எடுத்துள்ள ஒரு முக்கியமான முடிவில், மாநில மருத்துவ கவுன்சில்களின் (SMC) முடிவில் நோயாளிகள் திருப்தி அடையவில்லை என்றால், NMC அமைப்பின் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரியத்தில் (EMRB) மேல்முறையீடு செய்யலாம்.

நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு 

NMC செயலாளர் டாக்டர் பி. ஸ்ரீனிவாஸ் கூறுகையில், 2023ம் ஆண்டு நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது என்றும், அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன எனவும் தெரிவித்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால், நீதி கிடைக்காமல், கடுமையான விளைவுகளை சந்திக்கும் நோயாளிகளுக்கு, இந்த முடிவு நிவாரணம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகள் மேல்கமுறையீடு செய்யும் வசதி 

முன்னதாக, நோயாளிகள் மாநில மருத்துவ கவுன்சிலில் (SMC) மட்டுமே புகார் செய்ய முடியும், ஆனால் இப்போது நோயாளிகள் மாநில மருத்துவ கவுன்சில்களின் முடிவில் அதிருப்தி அடைந்தால், அவர்கள் தேசிய மருத்துவ ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இந்த முடிவு நோயாளிகளின் உரிமைகளை வலுப்படுத்துவதுடன், மருத்துவர்களை அதிக பொறுப்புடன் பணிபுரிய கட்டாயப்படுத்தும்.

மருத்துவர்களின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி

இந்த முடிவு மருத்துவத் துறையில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்வையும் அதிகரிக்கும் என்று டாக்டர் ஸ்ரீநிவாஸ் கூறினார். இப்போது மருத்துவர்கள் எந்த நோயாளியுடனும் அலட்சிய போக்கை கடைபிடிக்க முடியாது. ஏனென்றால் தேசிய அளவிலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். மருத்துவர்களின் அலட்சியத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு இந்த முடிவு நிம்மதி அளித்துள்ளது. இப்போது அவர்கள் நீதிக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை.

மேலும் படிக்க | எலும்புகளை சீர்குலைக்கும் வைட்டமின் டி குறைபாடு... ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

மேலும் படிக்க |  உச்சி முதல் பாதம் வரை... பச்சை பப்பாளி ஜூஸ் கொடுக்கும் அற்புத நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News