Income Tax Rules | நாட்டின் பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் வருமானவரி உச்ச வரம்பு உயர்வு உள்ளிட்ட பல வரி சம்பந்தமான அறிவிப்புகளை வெளியிட்டார். விரைவில் புதிய வரி கொள்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். இதனால் மாதம் ஊதியம் பெறுபவர்கள், வருமான வரி கட்டுபவர்கள் எல்லாம் வரி சேமிப்பு குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது என்ன என்பது குறித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு பெற முடியும்.
பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்து, அவர்களுக்கு வரும் வட்டி ஆகியவற்றுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். அதற்காக மத்திய அரசு பிரத்யேகமாக சில திட்டங்களை வகுத்துள்ளது. அந்த திட்டம் என்ன? எப்படி முதலீடு செய்வது என்பது உள்ளிட்ட அடிப்படை விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சுகன்யா சம்ருத்தி யோஜனா (SSY)
மத்திய அரசு பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்திய சிறந்த திட்டம் தான் சுகன்யா சம்ருத்தி யோஜனா (SSY). இது குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பிற முக்கிய செலவுகளுக்காக உருவாக்கப்பட்ட எதிர்கால சேமிப்பு திட்டம் ஆகும். பெண் குழந்தை பிறந்த 10 வயதிற்குள் குழந்தையின் பெயரில் இந்த கணக்கைத் திறக்கலாம். 21 ஆண்டுகளுக்கு பின் கணக்கு முதிர்வடையும். 18 வயதிற்கு பின் திருமணத்திற்காக கணக்கை முன்கூட்டியே மூடலாம். 80C பிரிவின் கீழ் ₹1,50,000 வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு உண்டு.
மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா... எளிமையான சட்டங்கள், எளிமையான மொழி
வரி விலக்கு – 80C பிரிவு
* கல்வி கட்டண செலவுகள்: இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தும் கட்டணங்கள் 2 குழந்தைகளுக்குள் இருந்தால் வரி விலக்கு பெறலாம்.
* PPF மற்றும் காப்பீடு முதலீடு: பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக செய்யும் இந்த முதலீடுகள் 80C பிரிவில் வருமான வரி விலக்கில் வரும். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி செலவுக்கு ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.
* மருத்துவ காப்பீடு – 80D பிரிவு | குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செலுத்தும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கு ₹25,000 வரை வரிவிலக்கு கிடைக்கும். மேலும், முன்கூட்டிய மருத்துவ சோதனை (Preventive Health Checkup) செலவுக்கு கூட ₹5000 வரி கழிவு பெறலாம்.
* விடுப்பு பயணத் தொகை (LTA) – 10(5) பிரிவு | சம்பளதாரிகள் குழந்தை பிறந்த பிறகு குடும்பத்துடன் பயணிக்கும் போது, அவர்களின் பயண செலவுகள் வரிவிலக்குக்கு உட்பட்டது. ஆனால், 2 குழந்தைகளுக்குள் மட்டுமே இந்த விடுப்புப் பயண செலவினம் வரி கழிவுக்கு சேர்க்கப்படும்.
* குழந்தை கல்வி மற்றும் விடுதி கட்டணம் (Hostel Allowance) – 10(14) பிரிவு | பெற்றோர் சம்பள தொகையில் கல்வித் தொகை சேர்த்திருந்தால், ஒரு குழந்தைக்கு மாதம் ₹100 வரை வரி விலக்கு பெறலாம். குழந்தை Boarding School சென்றால், கூடுதல் ₹300 வரை மாதம் வரி விலக்கு பெறலாம்.
* குழந்தையின் பெயரில் வருமானம் – 10(32) பிரிவு | பெற்றோர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால், அந்த வருமானம் பெற்றோரின் வருமானத்தில் சேர்க்கப்படும். ஆனால், ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ₹1500 வரை வரிவிலக்கு பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ