Ed Sheeran Chennai Concert AR Rahman Urvasi Urvasi Song : பிரபல ஆங்கில பாடகர், எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு பாடல் பாடியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
உலகளவில் பிரபலமான பாப் பாடகராக இருப்பவர், எட் ஷீரன். இவர், இந்தியாவில் தனது இசைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். எப்போதும் மும்பை-டெல்லி உள்ளிட்ட வட நாடுகளுக்கு சென்று அங்கு கான்சர்ட்களை நடத்திய இவர், முதன்முறையாக சென்னைக்கு வந்தார். இந்த நிகழ்ச்சியில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டது, இசை பிரியர்களின் காதுகளுக்கு விருந்தாக அமைந்தது.
சென்னையில் இசைக்கச்சேரி:
எட் ஷீரனின் இந்த இசைக்கச்சேரி, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நேற்று நடந்தது. இதனால், போக்குவரத்து மாற்றம், வேறு சாலையில் பஸ்கள் செல்வது போன்ற மாற்றங்களும் ஏற்பட்டது. இந்த இசைக்கச்சேரிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்ட நிலையில், சென்னையில் இருக்கும் பல ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.
எட் ஷீரன், தனது இசைக்கச்சேரிக்கு முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானையும் அவரது மகன் அமீனையும் அவர்களது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அந்த புகைப்படங்களில் இவர்கள் இசைக்கருவிகளுடன் இருக்கும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் திடீரென என்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், அனைவருக்கும் பிடித்த பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தார்.
ஊர்வசி..ஊர்வசி..
எட் ஷீரன், உலகளவில் பிரபலமான தனது ‘Shape Of You’ பாடலை மேடையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்காக கரகோஷத்தை எழுப்புங்கள் என்று கூறினார். ரசிகர்கள் இதைக்கேட்டு குஷியாகி ஆர்ப்பரிக்க அதற்கு இடையில் ‘ஊர்வசி..ஊர்வசி..டேக் இட் ஈசி ஊர்வசி..’ பாடலை பாடிக்கொண்டே கையடக்க கீ-போர்ட் உடன் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் தாேன்றினார். 1994ல் வெளியான காதலன் படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது. இதற்கு இசையமைத்ததும் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.
Chartbuster
ED SHEERAN x A R RAHMAN #EdSheeran #ARRahman pic.twitter.com/SGPLz6Gu8I
ஒரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் ஊர்வசி பாடலை பாட, இன்னொரு பக்கம் அவருக்கு ஈடு கொடுத்து எட் ஷீரன் ‘ஷேப் ஆஃப் யூ’ பாடலை பாடினார். இதை ரசிகர்கள் குஷியில் குதித்துக்கொண்டே வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
எட் ஷீரனின் இந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பாடகி ஜோனிடா காந்தியும் கலந்து கொண்டார். அவர், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், டாக்டர் படத்தில் இடம் பெற்றிருந்த “பிரைவேட் பார்டி” பாடலை பாடினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்குமா?
கடைசியாக சென்னையில் நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து இனி சென்னையில் இனி இசை நிகழ்ச்சியே நடத்தக்கூடாது என ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு, அவர் இப்போதுதான், சென்னையில் வேறு ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எட் ஷீரன் பேசியது..
ஆங்கில பாடகர் எட் ஷீரன், இசை நிகழ்ச்சிக்கு இடையே தான் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தியது ஏன் என்பதற்கான காரணத்தையும் தெரிவித்தார். இந்தியாவிற்கு தான் வருவது இது 4ஆம் முறை எனக்கூறிய அவர், எப்போதும் டூர் வரும் போது, மும்பை-டெல்லி உள்ளிட்ட இடங்களில் மட்டும் இசை நிகழ்ச்சி நடத்துவதாகவும் கடந்த 2 முறை வரும் போது சென்னையில் நடத்தலாம் என முடிவு செய்ததாகவும் பேசினார். சென்னை மக்கள் தன்னை அன்புடன் வரவேற்றதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | யார் இந்த எட் ஷீரன்? ஆங்கில பாடகர் சென்னையில் கான்சர்ட் நடத்துவது ஏன்?
மேலும் படிக்க | AR Rahman இசை நிகழ்ச்சி குளறுபடி - விரைந்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ