சமீபத்திய நாட்களில் தங்கத்தின் விலை வியத்தகு ஏற்றத்தை சந்தித்தது, இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தங்கம் முதலீட்டாளர்களையும் பொதுமக்களையும் வருத்தமடைய செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கத்தை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் இதன் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. எப்போதாவது தங்கத்தின் விலை குறையும் போது அதிகமானோர் வாங்க முற்படுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக தங்கத்தின் விலை உயரும் போது தங்கம் வாங்குபவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது தமிழகத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக அடுத்தடுத்த திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் தங்கம் வாங்க விரும்புவோர் மத்தியில் அதிக துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு சுமார் ரூ.760 ஆக உயர்ந்துள்ளது. அதாவது நேற்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.7,810 ஆக இருந்தது, ஆனால் தற்போது ரூ.95 உயர்ந்து ரூ.7,905 ஆக உள்ளது. இதனிடையே, ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலையும் 103 ரூபாய் அதிகரித்து 8,623 ரூபாயாக உள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை
இந்தியாவில் தங்கம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.95 உயர்ந்து ரூ.7,905 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.760 அதிகரித்து தற்போது ரூ.63,240 ஆகவும், 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.79,050 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.113 அதிகரித்து தற்போது ஒரு கிராம் ரூ.8,623 ஆகவும், 1 சவரன் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.824 அதிகரித்து தற்போது ரூ.68,984 ஆகவும் உள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,456 ஆகவும், 18 காரட் தங்கம் 1 சவரன் ரூ.51,648-க்கும், 10 கிராம் ரூ.64,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கத்தின் விலை
நேற்றைய பிப்ரவரி 4ம் தேதி தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1 கிராம் 22 காரட் தங்கம் ரூ.7,810-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.8,2025-க்கு விற்கப்பட்டது. அதே சமயம் 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.78,100க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலையும் இதேபோல் உயர்ந்து 1 கிராம் ரூ.8,520 ஆகவும், 1 சவரன் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.68,160 ஆகவும், 10 கிராம் 24 கேரட் ரூ.85,200 ஆகவும் இருந்தது.
வெள்ளியின் விலை
தங்கத்தை தாண்டி வெள்ளியும் அதிகரித்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது வெள்ளி விலை. அதாவது நேற்று ரூ.106 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை தற்போது ரூ.107 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து மொத்தம் ரூ.1,07,000 ஆக உள்ளது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவதால், அனைத்து முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.9000 முதலீடு போதும்... ரூ.10 கோடி கையில் இருக்கும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ