ஜோதிடத்தில் கிரகங்கள் நகரும் விதத்தை பொறுத்து ஒவ்வொரு வாரமும் நம் வாழ்க்கையையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை இந்த வாரம் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெவ்வேறு வாய்ப்புகளையும் சவால்களையும் சந்திக்க உள்ளனர். இந்த வாரம் சில ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் பெறலாம், அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
இந்த வாரம் உங்கள் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய திட்டங்களைத் தொடங்க இது நல்ல காலம். உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டலாம். பதவி உயர்வுக்காக காத்திருப்போருக்கு நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். யோகா மற்றும் தியானம் உங்கள் மன அமைதிக்கு உதவும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சக ஊழியர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தில் சில நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ள முதியவர்களின் உடல் நிலை மோசமாகலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த வாரம் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவைவும், பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரலாம். குடும்பத்தில் ஒரு நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்வது அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் தொழில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய திட்டங்கள் சில நிறைவேறாமல் போகலாம். வியாபாரத்தில் புதிய போட்டிகள் வரலாம், எனவே கவனமாக இருப்பது முக்கியம். ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். குடும்பத்தில் சில சண்டைகள் வரலாம். ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கிடைக்கும். குறிப்பாக உங்களின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சி தரும். மன அழுத்தத்தைத் தவிர்க்க தினசரி தியானம் செய்யுங்கள்.
கன்னி
இந்த வாரம் உங்களின் கடின உழைப்பு அதிக பலன் தரும். நீங்கள் தொடங்கிய திட்டங்கள் வெற்றி பெரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள தெரிந்து கொள்ளுங்கள். குடும்பத்துடன் ஒரு பயணம் செய்ய வாய்ப்புள்ளது. சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
துலாம்
துலாம் ராசியினருக்கு பணியிடத்தில் குழப்பம் நீடிக்கும். சக ஊழியர்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். வியாபாரத்தில் எந்த ஒரு முயற்சி எடுக்கும் முன்பும் தீர ஆலோசிப்பது நல்லது. பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது மற்றும் அவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சுற்றுலா செல்லலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்க வேண்டாம். முதலீடு தொடர்பான விஷயங்களில் தீவிர ஆலோசனைக்கு பிறகு ஈடுபடவும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மனதிற்கு ஆறுதல் தரும். தலைவலி மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் வெற்றியை தரும். வியாபாரத்தில் புதிய தொடக்கங்கள் ஏற்படும். குடும்பத்தில் புதிய நிகழ்ச்சிகள் நடக்கும், மனதிற்கு அமைதி தரும். உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா செய்வது நல்லது.
மகரம்
இந்த வாரம் அலுவலகத்தில் உங்களின் திட்டங்கள் நிறைவேறும். உங்கள் ஆலோசனைகள் அனைவராலும் பாராட்டப்படும். உங்கள் பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இதன் மூலம் நிதி தொடர்பான சிக்கல்களை தவிர்க்கலாம். உங்கள் மனைவியுடன் செலவிடும் நேரம் மனதிற்கு ஆறுதல் தரும். சீரான உணவு பழக்கங்கள் நோய்களை தீர்க்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதிய கூட்டாண்மை உங்கள் வியாபாரத்திற்கு உதவும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சி தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணியிடத்தில் மாற்றம் இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பாராட்டு கிடைக்கும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்துடன் பழைய கருத்து வேறுபாடுகளை இந்த வாரம் பேச வேண்டாம். தோல் தொடர்பான பிரச்சனைகளை உடனே பார்ப்பது நல்லது.
மேலும் படிக்க | வசந்த பஞ்சமி 2025: சரஸ்வதிக்கு உகந்த நாளில் தெரிந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ