பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனங்களை அடுத்து துப்பாக்கி emoji-னை தண்ணீர் துப்பாக்கி emoji-யாக மாற்ற மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளது!
இதுகுறித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது.... வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் இம்மாற்றத்தினை கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது., விரைவில் இம்மாற்றம் செயல்படும் என தெரிவித்துள்ளது.
We are in the process of evolving our emojis to reflect our values and the feedback we’ve received. Here’s a preview: pic.twitter.com/BlB3yYTSht
— Microsoft (@Microsoft) April 25, 2018
iOS 10 இயங்குதல மேம்பாட்டிற்கு பின்னர், செய்தி செயலியில் இருந்த 'pistol emoji' ஆனது water gun-ஆக மாற்றப்பட்டதை அடுத்து WhatsApp, Facebook, Twitter ஆகியவை தங்களுடைய செயலிகளிலும் இந்த மாற்றத்தினை செயல்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது இந்த மாற்றத்தினை தங்களது இயங்குதளமான Windows 10-லும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.