தவெக ஆண்டு விழா: எதிர்பார்த்ததை பேசாத விஜய்! மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் பேச்சு..

Vijay Speech In TVK First Anniversary : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் முக்கிய விஷயங்கள் என்னென்ன நடந்தது என்பதை குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 26, 2025, 01:06 PM IST
  • தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா
  • எதிர்பார்த்ததை பேசாத விஜய்..
  • மும்மொழிக்கொள்கை பற்றி மட்டும் பேசினார்
தவெக ஆண்டு விழா: எதிர்பார்த்ததை பேசாத விஜய்! மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் பேச்சு.. title=

Vijay Speech In TVK First Anniversary : தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடந்தது. இதில் விஜய் என்ன பேசினார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஆங்கிலத்தில் உரையை தொடங்கிய விஜய்:

பிராசந்த் கிஷோர் தங்களின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதற்கு நன்றி தெரிவித்தார். நாம் வளர்ந்து வரும் பெரிய கட்சியாக இருக்கிறோம். 1967 மற்றும் 1997 சட்டப்பேரவை தேர்தலை போல, இப்பாேது ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறோம், என கூறினார்.பிரசாந்த் கிஷோர் இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இதனால், அவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.

“என் நெஞ்சில் குடியிருக்கும்” என வழக்கம் போல உரையை தொடங்கிய விஜய், அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். “அரசியல்னாலே வேற லெவல்தான்ல. அரசியலில் மட்டும்தான், யாரு யார எப்போ எதிர்பாங்கன்னே நமக்கு தெரியாது. யார், யாரை ஆதரிப்பாங்கன்னே தெரியாது. இதனால்தான், அரசியலில் மட்டும் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் இல்லை என சொல்வார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அது ஜனநாயக உரிமை. ஆனால், ரொம்ப பிடிச்சுப்போன ஒருவர் வந்தால் நல்லவங்க ஆதரிப்பாங்க. ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும்.

“தவெக மேல கம்ப்ளைண்ட்...”

சில அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற நேரங்களில் கன்ஃபியூஷன் வர்தான் செய்யும். அப்பேது, வற்றவன் போறவன் எல்லாம் கட்சியை ஆரம்பிக்கிறாங்கன்னு சொல்லத்தான் செய்வாங்க. இப்படிப்பட்ட ஒரு அரசயில் களத்தில் பயம் இல்லாம, பதற்றம் இல்லாம, வரும் பிரச்சனைகளை இடது கையில் டீல் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

அரசியல் கட்சியின் பெரிய பலமே, அதன் கட்டமைப்புதான். அதற்கான வேலையில்தான் ஈடுபட்டிருக்கிறோம். மாவட்ட நிர்வாகிகள் எல்லாரும், இளைஞர்களாக இருப்பதாக ஒரு குறை. அப்படி இருந்தால் என்ன? அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது அவர்கள் பின்னால் நின்றதும் இளைஞர்கள்தான். இன்னொரு கம்ப்ளைண்ட், கட்சி நிர்வாகிகள் அனைவருமே, சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பது. ஏன் வரக்கூடாதா? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்துள்ளார்கள். நம் கட்சியே எளிய மக்களுக்கான கட்சிதான். நம் கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். முதலில் பண்ணையாரா இருக்கவங்க பதவியில் இருப்பாங்க, இப்போ பதவியில் இருக்கவங்க பண்ணையாரா மாறிட்ராங்க.

மக்களின் நலனை பற்றியோ, ஆட்சியை பற்றி கவலைப்படாமல் பணத்தை பற்றி மட்டும் கவலை படுகிறார்கள். இப்படிப்பட்ட பண்ணையார்களை அரசியலை விற்று அகற்றுவதுதான் நம் முதல் வேலை. பூத் லெவல் ஏஜன்ட்ஸை வைத்து, 2026 தேர்தலை சந்திக்க உள்ளோம். கூடிய விரைவில் பூத் கமிட்டு மாநாட்டை நடத்த போறோம். அப்போது தெரியும் தவெக எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை என்று. 

மும்மொழிக்கொள்கை:

இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால், கல்வி நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டேன் என அறிவித்துள்ளனர். எல்.கே.ஜி, யு.கே.ஜி பசங்க சண்ட போட்டுக்குறா மாறி இருக்கு. கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை, வாங்க வேண்டியது இவர்களுடைய கடமை. ஆனால் இருவரும் பேசி வைத்துக்கொண்டு, மாறி மாறி ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். இருவரும் அடிச்சிக்கிறா மாதிரி அடிச்சிக்கிட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். What Bro, it's very wrong bro. இதற்கு இடையில் நம்ம பசங்க சில சம்பவங்களை செய்து விட்டு வெளியில் வந்து விட வேண்டியது. #TVKForTN. 

நம் ஊர், சுய மரியாதை கொண்ட ஊர். அனைத்தையும் மதிப்போம் ஆனால் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் அரசு வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால், எப்டி ப்ரோ?

தவெக சார்பாக பொய் பிரச்சாரங்களை புரம் தள்ளி இதனை உறுதியாக எதிர்க்க வேண்டும். தைரியமாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என்று விஜய் பேசினார்.

எதிர்பார்த்தை பேசவில்லை...

விஜய், திமுக, அதிமுக குறித்தும், சமீப காலமாக பெண்களுக்கு எதிராக அதிகரித்திருக்கும் குற்றங்கள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மேலோட்டமாக மும்மொழிக்கொள்கை குறித்து மட்டும் ரொம்ப சிம்பிளாக பேசியது அரசியல் கட்சி விமர்சகர்கள் மற்றும் பொதுமக்க்ளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

மேலும் படிக்க | தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா! வைரலாகும் விஜய்யின் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News