உணவுடன் அல்லது உணவிற்குப் பிறகு, குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதிலும் பழச்சாறுகள் என்று, பாட்டில்கள் அல்லது டெட்ரா பேக்குகளில் விற்கப்படும் பானங்கள் ஆரோக்கியமானவை என்று நாம் நினைத்துக் கொண்டு அதிகம் எடுத்துக் கொள்கிறோம். அதிலும் சோடா பானங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
குளிர்பானங்களின் பக்க விளைவுகள்
செயற்கைப் பழச்சாறுகள், சோடா பானங்கள், கோக் பெப்சி போன்ற கார்பனேட்டட் பானங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை. இவற்றில் இருப்பதெல்லாம் சர்க்கரை மட்டுமே. ஊட்டச்சத்துக்கள் என்பது மருந்துக்கும் இல்லை. கூடுதலாக இதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், உங்கள் உடலை சல்லடையாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குளிர்பானங்கள் குறித்து உணவியல் நிபுணரின் கருத்து
குளிர்பானங்களை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் ஆரோக்கியம் பாதிப்பை பற்றி, பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவ் கூறும் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். இவர் குடலுக்கு ஏற்படும் பாதிப்பு முதல், எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி அதனை சல்லடையாய் துளைப்பது வரை குளிர்பானங்களால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகள் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
எலும்பு ஆரோக்கியம்
குளிர்பானங்களில் இருக்கும் அதிக அளவிலான சர்க்கரை, மற்றும் ரசாயனங்கள், எலும்புகளை சல்லடையாக துளைத்து, அவற்றில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி, மூட்டு வலி, ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. கால்சியம் சத்து குறைவதால் எலும்புகள் மற்றும் பற்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
குடல் ஆரோக்கியம்
குளிர்பானங்கள், குடல் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் வாயு, உப்பிசம், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கிறது. சில சமயங்களில் வாந்தி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
கொழுப்பு கல்லீரல்
மதுபானங்களால் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு எந்த வகையிலும் குளிர்பானங்கள் குறைந்தது அல்ல. கொழுப்பு கல்லீரல் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் குளிர்பானங்களும் அடங்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செய்தி.
மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்
உடல் பருமன்
குளிர்பானங்களில் எக்கச்சக்க அளவில் சர்க்கரை இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இதற்கு முற்றிலும் நோ சொல்ல வேண்டும். இல்லையென்றால் எடை இழப்பு சாத்தியம் அல்ல. அளவிற்கு அதிகமான கலோரியும், உடலை பருமனை அதிகரிக்க உதவுமே தவிர, உடல் எடையை குறைப்பதற்கு கடுகு அளவு கூட உதவாது.
இதய ஆரோக்கியம்
குளிர்பானங்களில் அளவிற்கு அதிகமாக உள்ள சர்க்கரை மற்றும் காஃபின், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே இதய நோய்கள் ஏற்படாமல் தப்பிக்க, குளிர பானங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
இரத்த சர்க்கரை அளவு
நீரழிவு நோயாளிகள் குளிர்பானங்கள் பக்கமே போகக்கூடாது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. குளிர்பானங்கள் நோயாளிகளுக்கு விஷம் போன்றது எனலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ மருத்துவ நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறும் படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ