தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டி மேளம்’ சீரியல்.
கெட்டி மேளம் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கவின் கல்யாணத்தை நிறுத்த வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, லட்சுமி அஞ்சலிக்காக வேண்டிக் கொண்ட பரிகாரம் செய்ய கோவிலுக்கு சென்று வரும்போது ஆட்டோ ரிப்பேராகி வழியில் நிற்கிறது. இதனால் லட்சுமி மண்டபத்திற்கு நடந்து வர அப்போது வெற்றி எதிரில் வர அவன் லட்சுமியை பிக்கப் செய்து மண்டபத்திற்கு அழைத்து வருகிறான்.
மண்டபத்திற்கு வந்ததும் சிவராமன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வா என்று லட்சுமியை கூப்பிட லட்சுமி வெற்றியிடம் கல்யாணத்தை முடிச்சிட்டு தான் போகணும் என உள்ளே செல்கிறாள்.
குழப்பம் அடையும் துளசி
இந்த சமயத்தில் வெற்றி துளசியை பார்க்க கடவுளே மூணு நாளா என் ஆளை பார்க்கலனு கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். இப்போ அவளை என் கண்ணுல காட்டிட்ட என சந்தோஷப்படுகிறான். துளசி வெற்றியை பார்த்து இவன் இங்கே என்ன பண்றான் என குழப்பம் அடைகிறாள்.
அதை தொடர்ந்து வெற்றி உள்ளே செல்ல துளசி என்னை பாலோ பண்ணிட்டு இங்கேயும் வந்துட்டியா என கோபப்படுகிறாள். அங்கு வந்த லட்சுமி இவன்தான் வெற்றி.. என் பிரண்டு, அன்னைக்கு கூட வீட்டுக்கு வந்தானே அவன் தான் இது என்று சொல்கிறாள். வெற்றி இது யாரு என்று கேட்க இதுதான் என் பொண்ணு துளசி என சொல்ல வெற்றி லட்சுமி வீட்டில் டீ சூப்பராக இருப்பதாக சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறான்.
அக்கா தீபாவை பார்க்கும் வெற்றி
பிறகு லட்சுமி உள்ளே சென்ற நேரத்தில் துளசி தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க என வெற்றியை துரத்த வெற்றி வெளியே செல்லும் நேரத்தில் அவனது அக்கா தீபாவை பார்த்து விடுகிறான். அக்கா நீ என்ன இங்க என்று கேட்க இது என்னோட நாத்தனார் கல்யாணம் என்று சொல்கிறாள்.
தீபா துளசியுடன் இதுதான் என் தம்பி என் அறிமுகம் செய்து வைக்கிறாள். வெற்றிக்கு இது தனது அக்காவின் குடும்பம் என தெரிய வருகிறது. சிவராமன் நீ லட்சுமியை அத்தை என்றே கூப்பிடலாம் என்று சொல்ல துளசியை பார்த்த வெற்றி பிறகு வேண்டாம்.. நான் அக்கா என்றே கூப்பிடுகிறேன் என்று சொல்கிறான்.
அதன் பிறகு வெற்றியை மாப்பிள்ளை மகேஷுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். வெற்றியின் அப்பா கல்யாண மண்டபத்திற்கு வர உங்களோட கௌரவத்தையும் குடும்பம் கௌரவத்தையும் காப்பாற்றணும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக தான் இங்கு வந்ததாக சொல்லி சமாளிக்கிறான்.
கவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக அஞ்சலியை தேடியபடி அலைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ஜி.கே.மணியின் இல்லத்திருமண விழாவிற்கு விஜய் மகன் சென்றது ஏன்? இதுதான் காரணம்!
மேலும் படிக்க | இந்த பிரபலங்களின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ