SIP Investment: ஆயிரங்களை கோடிகளாக்க தேவையானது சரியான திட்டமிடல் மட்டுமே. குறைந்த வருமானம் உள்ளவர்களும், திட்டமிட்டு முதலீடு செய்தால், கோடீஸ்வரர் ஆகும் கனவை எளிதில் நிறைவேற்றலாம்.
வழக்கமான வங்கி RD முதலீட்டை விட, பரஸ்பர நிதியங்களில் மாதம்தோறும் செய்யப்படும் SIP முதலீடுகள் வியக்கத்தக்க வகையில் வருமானத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இதற்கு காரணம் அதில் கிடைக்கும் நல்ல ரிட்டன்களும், கூட்டு வட்டியின் நன்மைகளும் தான்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதாலும், சாமானியர்களும் மிகச்சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம் என்பதாலும், வருமானத்தை அள்ளிக் கொடுப்பதாலும், எஸ் ஐ பி முதலீடுகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.
SIP முதலீட்டில், சம்பாதிக்க தொடங்கும் போதே முதலீடு செய்வது, பணத்தை பன்மடங்காக்கும் முயற்சியை மிகவும் எளிதாக்கும். உதாரணத்திற்கு நீங்கள் 30 வயதில், மாதம் ரூ 15000, முதலீடு செய்யத் தொடங்கும் போது, அதன் மூலம், அறுபதாவது வயதில், எட்டு கோடி நிதியை சேர்த்து விடலாம்.
பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 முதல் 15 சதவீத வருமானம் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சில சிறந்த பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்யும் போது, 20 முதல் 25 % வருமானம் கிடைப்பதை, நாம் தரவுகளில் காணலாம்.
கூட்டு வட்டியின் பலன்: பரஸ்பரம் நிதயத்தில் கிடைக்கும் வருமானத்துடன், அதில் கிடைக்கும் கூட்டு வட்டியின் பலன் காரணமாக, நீண்டகால முதலீடுகளில், வியக்கத்தக்க வகையில், ரிட்டர்ன் கிடைக்கின்றன.
15X15X30 SIP சூத்திரம்: கோடீஸ்வரராக்கும் 15 15 30 ஃபார்முலா நீங்கள் மாதம் ரூபாய் 15,000 முதலீடு செய்யும் நிலையில், அதில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது என்று எடுத்துக் கொண்டால், 30 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைக்கும் தொகையை எளிய கணக்கீடுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மொத்த முதலீட்டுத் தொகை: 15X15X30 SIP சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடுகையில், நீங்கள் ரூ.15,000 மாதாந்திர SIP முதலீட்டை 30 ஆண்டுகள் தொடர்ந்தால், உங்கள் மதிப்பிடப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை ரூ.54,00,000 என்ற அளவில் இருக்கும்.
மூலதன ஆதாயங்கள்: 15X15X30 SIP சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடுகையில், நீங்கள் ரூ.15,000 மாதாந்திர SIP-ஐத் தொடங்கி 30 ஆண்டுகள் தொடர்ந்தால், உங்கள் மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.7,90,76,556 ஆக இருக்கும்.
ஓய்வூதிய நிதி: 15X15X30 SIP சூத்திரத்தைப் பயன்படுத்தி செய்யும் கணக்கிட்டில், நீங்கள் ரூ.15,000 மாதாந்திர SIP-ஐத் தொடங்கி 30 ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்தால், நீங்கள் திரட்டும் ஓய்வூதிய நிதி ரூ.8,44,76,556 ஆக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.