Additional Pension For Central Government Pensioners: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பணி ஓய்வுக்கு பிறகு பெறப்படும் ஓய்வூதியம் தொடர்பான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்
அரசு ஊழியர்களுக்கு அரசு பரிந்துரைத்த விதிகளின்படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசு சமீபத்தில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஓய்வூதியதாரர்கள் இதன் நேரடிப் பலனைப் பெறுவார்கள். இது தொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இந்த முடிவின் காரணமாக, ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த ஓய்வூதிய முறையின்படி, வயது வரம்பு இதன் அடிப்படையில் மாற்றப்பட்டு, வயதிற்கு ஏற்ப ஓய்வூதிய உயர்வு தீர்மானிக்கப்படும். இந்த கூடுதல் ஓய்வூதியத்தின் நன்மை எப்போது கிடைக்கும்? இதனால் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை
அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் பலன் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வெளியிட்ட புதுப்பிப்பின்படி, 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு இப்போது கருணை உதவித்தொகையின் பலன்கள் வழங்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கையை பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் செயல்முறையை அரசாங்கம் இன்னும் எளிதாக்கியுள்ளது. இதன் காரணமாக, ஓய்வூதியங்கள் எளிதாகவும் விரைவாகவும் விநியோகிக்கப்படும்.
Compassionate Allowace: கருணைத்தொகை
CCS, மத்திய குடிமைப் பணி (ஓய்வூதியம்) விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின் கீழ், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைத் தொகையின் நன்மையும் வழங்கப்படுகிறது. விதிகளின்படி, 80 முதல் 85 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் வரை கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். 85 முதல் 90 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியமாக 30 சதவீதம் வழங்கப்படும். 90 முதல் 95 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு 40 சதவீத கூடுதல் ஓய்வூதியமும், 95 முதல் 100 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு 50 சதவீத கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகை கிடைப்பதற்கான விதிகள்
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரரின் வயது 81 ஆக இருந்து, அவருக்கு ரூ.5,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டால், அவருக்கு அரசாங்கம் ரூ.1,000 கூடுதல் ஓய்வூதியத்தை அளிக்கும். இதன் பிறகு, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.6,000 ஓய்வூதியமாக கிடைக்கும். அதேபோல், 85 முதல் 90 வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,500 கருணை உதவித்தொகையாக வழங்கப்படும்.
கருணை உதவித்தொகை எப்போது கிடைக்கும்?
ஓய்வூதியதாரரின் வயது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை அடையும் போது, ஓய்வூதியதாரருக்கு அதே மாதத்தின் முதல் நாளிலிருந்து கருணை உதவித்தொகை வழங்கப்படும் என அரசாங்கம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதில் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கவும், அவர்கள் தங்கள் நிதியை முறையாக நிர்வகிக்கவும் பெரிய அளவில் உதவும். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய கூடுதல் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியத்தின் பலன் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.)
மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.15,000 போதும்... ஓய்வின் போது கையில் ரூ.8 கோடி இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ