கோவை மக்கள் கவனத்திற்கு! உள்துறை அமைச்சர் வந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு. இன்று இரவு ஈஷா யோகா மையம் செல்ல உள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2025, 10:10 AM IST
  • கோவையில் மத்திய உள்துறை அமைச்சர்.
  • பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
  • நாளை கோவையில் இருந்து புறப்படுகிறார்.
கோவை மக்கள் கவனத்திற்கு! உள்துறை அமைச்சர் வந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்! title=

கோவையில் இன்று நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர் பலர் நேரில் சந்திக்க உள்ளார்.

மேலும் படிக்க | தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் கடன் தரும் தமிழ்நாடு அரசு -யாருக்கு கிடைக்கும்?

ஈஷா யோகா மையம்

அதனைத் தொடர்ந்து இன்று காலை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாநகர அலுவலகத்தினை அமித்ஷா திறந்து வைக்கிறார். அங்கு பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று 26 ஆம் தேதி இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நாளை காலை  27ஆம் தேதி தனி ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி கோவை மாநகர பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையம், அவிநாசி சாலை, பீளமேடு, ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக 5000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்காக அவிநாசி சாலை, பீளமேடு எல்லை தோட்டம் சாலை, தண்ணீர் பந்தல் சாலை, தொண்டாமுத்தூர் மற்றும் பூண்டி பிரதான சாலைகளில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் இன்று செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் தங்கியுள்ள ஹோட்டலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ள நிலையில் இங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு துறையினரும் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 11 மணி அளவில் அமித்ஷா இங்கிருந்து புறப்பட்டு பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ஹோட்டலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க - TN Budget 2025: பட்ஜெட்டில் ஸ்டாலின் போடும் பலே திட்டம்... 2026 தேர்தலே டார்கெட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News