8வது ஊதியக்குழு: Fitment Factor என்றால் என்ன? ஊதிய உயர்வை இது எப்படி தீர்மானிக்கிறது?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது எந்த அடிப்படையில் செய்யப்படும்?

8th Pay Commission: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன? இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இது குறித்த முழுமையன தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

1 /11

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மத்திய அரசு 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து இதன் அமலாக்கத்திற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

2 /11

8வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சம்பளக் கமிஷனில் ஏற்படவுள்ள மாற்றங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எனினும், புதிய சம்பள அமைப்பை தீர்மானிக்கும் குழு இன்னும் அமைக்கப்படவில்லை.

3 /11

இதற்கு முந்தைய ஊதியக்குழுக்களில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பயன்படுத்தி ஊதிய ஊயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு வழிவகுத்தது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன? இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இது குறித்த முழுமையன தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

4 /11

8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு ஜனவரி 17, 2025 அன்று வெளியானது. 8வது சம்பளக் கமிஷன் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மாற்றங்களை மறுஆய்வு செய்து பரிந்துரைக்க அரசாங்கம் ஒரு சம்பள ஆணையத்தை அமைக்கவுள்ளது. பணவீக்கம் மற்றும் பிற பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இந்த ஆணையம் பரிந்துரைகளை வழங்குகிறது.

5 /11

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் பெருக்கல் காரணியாகும். தற்போது இருக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டருடன் பெருக்கப்பட்டு புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தீர்மானிக்கப்படுகின்றது.

6 /11

7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக 6வது ஊதியக் குழுவின் அடிப்படை ஊதியத்தில் (ரூ. 7,000) 2.57 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. 7வது சம்பளக் குழுவில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உயர்ந்தது.

7 /11

முன்னதாக, ஆறாவது ஊதியக் குழு 1.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் இருந்தது. 6வது ஊதியக்குழுவில் அடிப்படை சம்பளம் ரூ.7,000 ஆக இருந்தது.

8 /11

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு இனி அடிப்படை ஊதியமாக ரூ.51,480 ஆக அதிகரிக்கும். 

9 /11

ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக்குழுவில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இவர்களுக்கு மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு கிடைக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக உயரும்.

10 /11

7வது ஊதியக்குழுவின் காலம் டிசம்பர் 2025 -இல் நிறைவடையவுள்ளது. அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு அதன் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.