இந்திய அணி அடுத்த போட்டியாக நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. அப்போட்டிக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11 குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்திய அணி தற்போது அரை இறுதிக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் என விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆனால் அந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அவர் விளையாடாவிட்டால் அணியில் யார் சேர்க்கப்படலாம் என்பதை இங்கு பார்க்கலாம். இங்கே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11 கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அப்படி அளிக்கப்பட்டால் கே.எல்.ராகுல் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக ஆடலாம்.
சும்பன் கில் வழக்கம் போல் தொடக்க வீரராக களம் இறங்குவார். ரோகித்துக்கு ஓய்வு அளிக்கும் பட்சத்தில் கே.எல்.ராகுல் இவருடன் களம் இறங்குவார். அதேபோல் இப்போட்டிக்கு சும்பன் கில் கேப்டனாக நியமிக்கப்படுவார்.
நட்சத்திர வீரர் விராட் கோலி வழக்கம்போல் ஒன் டவுனில் இறங்குவார். கடந்த போட்டியில் சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.
இதுவரை ஸ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்திலேயே களம் இறக்கப்பட்டார். இப்போட்டியிலும் அதேபோல் களம் இறக்கப்படுவார். இவரும் நல்ல ஃபார்மில் உள்ளார்.
ரோகித் சர்மா களம் இறக்கப்படாத நிலையில், கே.எல்.ராகுல் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக ஆட வாய்ப்புள்ளது. இதனால் விக்கெட் கீப்பிங்-க்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படலாம். அப்படி தேர்வாகும்பட்சத்தில், இவர் மிடில் ஆர்டரில் களம் இறங்குவார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டரில் களம் இறங்குவார். இந்திய அணிக்கு நல்ல பினிஷராக வலம் வருகிறார்.
ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் சமீபமாக பந்து வீச்சில் அசத்தி வருகிறார். அதேபோல் பேட்டிங்கிலும் ஓர் அளவு நன்றாக விளையாடுவதால் அவர் 5வது இடத்தில் களம் இறக்கப்பட்டு வருகிறார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜடேஜா, இப்போட்டியில் களம் இறக்கப்படலாம். பேட்டிங்கில் இவர் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தபடியாக களம் இறக்கப்படலாம்.
நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இப்போட்டியில் இறக்கப்படுவார். தற்போதைய இந்திய அணியின் பிரதான சுழற் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
முகமது ஷமி இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து விச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவர் பும்ரா இல்லாத இடத்தை நிரப்பி வருகிறார்.
இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படலாம். கடந்த இரு போட்டிகளிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங்-கிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.