Food Habits Of Viswanathan Anand : அனைவராலும் செஸ் விளையாட்டை விளையாடிவிட முடியாது. அதற்கென்று முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். பின்பு அதை கற்றுக் கொள்ளும் அளவிற்கு பொறுமையும் நிதானமும் இருக்க வேண்டும். அதன் பிறகு கற்றதை செயல்படுத்தும் அளவிற்கு மூளை ஷார்பாக இருக்க வேண்டும். தினம்தோறும் செஸ்சை விளையாடி வந்தால் மட்டுமே அதில் மேதையாக அல்லது சாம்பியனாக மாற முடியும். அப்படிப்பட்ட செஸ் சாம்பியன்களுள் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். \
விஸ்வநாதன் ஆனந்த்:
55 வயதாகும் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம். இந்தியன் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகவும் விளங்குகிறார். செஸ் உலகில் இவர் செய்த சாதனைகள் மட்டும் ஏராளம். இவரது அகாடமியில் செஸ் பயிற்சி பெரும் மாணவர்கள், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். ஆனந்த் இந்த அளவிற்கு செஸ் விளையாட்டை கவனத்துடன் ஆட அவருக்கு அவர் சாப்பிட்ட உணவுகளும் சில பழக்கங்களும் உதவியுள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
டயட்:
விஸ்வநாதன் ஆனந்த், இந்த உணவுகளை மூளையை ஷார்ப் ஆக்க மட்டுமல்ல, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் சாப்பிடுவாராம்.
புரதசத்து உணவுகள்:
விஸ்வநாதன் ஆனந்த், தான் எடுத்துக் கொள்ளும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் புரதம் அதிகமாக இருக்க வேண்டும் என விரும்புவாராம். விளையாட செல்லும் முன்னர், முழு தானிய உணவுகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.
அளவு சாப்பாடு:
விளையாட செல்வதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த், பழங்கள், நட்ஸ் அல்லது சாலட்களை மட்டும் சாப்பிடுவாராம். இவை, சீக்கிரமாக செரிமானம் ஆவதுடன் வயிறையும் மூளையையும் லைட்டாக வைத்துக்கொள்ளுமாம்.
நீர்ச்சத்து:
மூளையை தெளிவாக வைத்துக்கொள்ள, உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். இதை பின்பற்றும் ஆனந்த், நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பாராம்.
மூளைக்கான உணவுகள்:
ஒமேகா 2 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த வால் நட்ஸ், ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பெர்ரிஸ் உள்ளிட்டவற்றை இவர் சாப்பிடுவதாக கூறப்படுகிரது. அதே போ பிரவுன் அரிசி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றையும் இவர் எடுத்துக்கொள்கிறாராம்.
பழக்கங்கள்:
மேற்கூறிய உணவு பழக்கங்கள் மட்டுமல்ல, சில தினசரி ஹாபிக்கலும் ஆனந்தை, விளையாட்டில் நன்றாக செயல்பட வைத்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு கோயிலுக்கு செல்ல மிகவும் பிடிக்குமாம். பல கோயில்கள் தனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதாக கூறும் இவர், தினமும் சாமி கும்பிடுவதாக சில நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இது, தனது உயர்ந்த மனநிலையை அடைய உதவியதாகவும் தெரிவித்திருக்கிறார். இது, அவருக்கு செஸ் விளையாட்டின் போது கவனம் செலுத்தவும் உதவுமாம்.
விஸ்வநாதன் ஆனந்திடம் இருக்கும் இன்னும் சில பழக்கங்களும் அவருக்கு கவனச்சிதறல் ஏற்பட விடாமல் தடுத்திருக்கிறது. அதில் ஒன்று புத்தகம் படிப்பது. இவர், நல்ல புத்தகங்களை தேடித்தேடி படிக்க விரும்புபவர். அதே போல, இவருக்கு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளவும் பிடிக்குமாம். சில நல்ல இசைகளையும் இவர் தேடித்தேடி கேட்பாராம்.
மேலும் படிக்க | 3 மாதத்தில் 16 கிலோ எடை குறைந்த ஆலியா பட்! வெறும் வயிற்றில் ‘இதை’ குடிப்பாராம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ