ஆஞ்சநேயருக்குப் பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்.. இவர்களுக்கு எப்போதும் எதிர்பாராத பணம் கிடைக்கும்!

ஜோதிடத்தின் படி, அனுமனுக்கு மிகவும் விருப்பமான ராசிக்காரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதற்கு முன் நீங்கள் அனுமன் பிரியராக இருந்தால் உங்களுக்கும் பலமடங்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  அனுமன் பக்தர்கள் உட்பட அனைவரும் வாழ்க்கையில் இன்பமாக இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட இந்த  நான்கு ராசிகள் மட்டும் அனுமன் அருளைக்கூடுதலாகப் பெறுவார்கள். 

வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான நாட்களாக உள்ளன. அந்தவகையில் செவ்வாய்க் கிழமை அனுமனுக்கு மிகவும் உகந்த நாட்களாக இருக்கிறது. அனுமன் அருள் பலமடங்கு கிடைக்க வாரந்தோறும் வீட்டில் அல்லது கோவிலுக்குச் சென்று அனுமனை வழிப்படுங்கள். உங்களுக்கு சகலச் செல்வமும் கிடைக்கும். இல்வாழ்க்கையில் இன்பமாய் இருப்பீர்கள். அனுமனுக்கு மிகவும் பிடித்த ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 /8

சனி பகவான் மிகவும் விரும்பும் கடவுளாக அனுமனைக் கூறுகிறார். சனியுடன் தொடர்புடைய ராசிக்காரர்கள் அனைவரும் அனுமனின் அருளைப் பெறுவார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. 

2 /8

சனி மற்றும் ஆஞ்சநேயரின் அருளால் சில ராசிகளுக்கு வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் உட்பட அனைத்து கஷ்டங்களும் மகிழ்ச்சியாக மாறும். 

3 /8

ஆஞ்சநேயரின் அருளால் இந்த ராசிக்காரர்கள் பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் பலமடங்கு கிடைக்கும். உடல்நலத்தில் ஆரோக்கியம் பெறுவார்கள்.   

4 /8

மகர ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரின் அருளால் பல்வேறு நன்மைகளைப் பெறுவார்கள். கடினமான சூழல்களில் பிரச்சனையை எதிர்கொண்டு அதில் வெற்றி அடைய ஆஞ்சநேயர் துணை இருப்பார். இவர்களுக்கு உண்டாகும் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும் என்று கூறுகின்றன. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.  

5 /8

மேஷ ராசிக்காரர்கள்: ஆஞ்சநேயருக்கு மிகவும் சிறப்பான நாளான செவ்வாய்க் கிழமையில் வழிப்பட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிதி வரவு உள்ளிட்டவை எதிர்பாராமல் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

6 /8

சிம்மம் ராசிக்காரர்கள்: இந்த ராசியின் அதிபதியா சூரியன் அனுமனுக்கு நெருங்கிய தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. இதனால் சிம்மம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் உருவாகும் பிரச்சனைகள் விரைவில் நீங்கும். 

7 /8

விருச்சிக ராசிக்காரர்கள்: சூரியனின் அருளால் பெரிதும் பயனடைவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கடி வரும்.  நீங்கள் ஆஞ்சநேயரை வழிப்பட்டால் உங்களுக்கு மிகவும் நல்லது. வாழ்க்கையில் மேலும் பல நன்மைகளைப் பெறுவீர்கள். 

8 /8

பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.