Guru Vakra Nivarthi Palangal: குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துவிட்டார். இதனால் அதிக நன்மைகளை அடையப்போகும் ராசிகள் எவை? எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டம்?
Guru Peyarchi Palangal: பிப்ரவரி 4 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார். அவர் 2024 அக்டோபர் 9 ஆம் தேதி, வக்ர பெயர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் மொத்தம் 119 நாட்கள் இருந்த பிறகு, தற்போது அவர் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். ஜோதிடத்தின் படி, குரு வக்ர நிவர்த்தி வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் நேர்மறையான மாற்றம் மற்றும் முன்னேற்றத்தின் துவக்கமாக பார்க்கப்படுகின்றது.
சுப கிரகமான குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். மே மாத குரு பெயர்ச்சிக்கு பிறகு அவர் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவார். இது இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.
நேற்று, அதாவது பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இது இந்த மாதத்தின் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால், சில ராசிளில் இதனால் அதிக சுப பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசியினருக்கு குரு வக்ர நிவர்த்தி மற்றும் மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி சுபமானதாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும், ஆனால் மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகள் வலுவடையும். புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுங்கள், ஆனால் புத்திசாலித்தனமாக நடவடிக்கைகளை எடுங்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்: குரு வக்ர நிவர்த்தி சிம்ம ராசிக்கார்ரகளுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். நல்ல ஆரோக்கியம் உங்களை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும். ஆனால் அதிகப்படியான வேலை சோர்வுக்கு வழிவகுக்கும். பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து அதிக செலவுகளைத் தவிர்க்கவும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கும் இது ஒரு நல்ல நேரம். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்: குரு வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஈட்ட வாய்ப்புகள் ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும், கூட்டாண்மையில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு: நேற்று நடந்த குரு வக்ர நிவர்த்தியும், மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய சாதனைகளை செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். தொழிலை விரிவாக்க வாய்ப்புகள் உள்ளன. உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். யோகா மற்றும் உடற்பயிற்சியால் நீங்கள் பயனடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.
கும்பம்: குரு வக்ர நிவர்த்தியின் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழில் வளர்ச்சி அடையும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். சமூக கௌரவம் அதிகரிக்கும், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கோயில்களில் குரு பகவானின் சன்னிதியில் விளக்கு ஏற்றி வைப்பதும், கொண்டைக்கடலையை மாலையாய் செய்து அர்ப்பணிப்பதும் குரு பகவானின் சிறப்பான அருளை பெற உதவும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.