TN Govt Forms Committee About Pension Scheme: மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்து தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அது என்ன வகையான உத்தரவு? அதன்மூலம் யாருக்கெல்லாம் நன்மை? அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறதா? அதற்கான வழிமுறைகள் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்?
தமிழ்நாடு அரசு அவ்வப்போது அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசுத் துறையில் பணிபுரிந்து பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளும், சலுகை சார்ந்த தகவல்களும் அந்த சலுகைகளை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும், அதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தனது தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதற்கான முன்னெடுப்பு எதுவும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எடுக்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட குழு
இந்த நிலையில் ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கும் நோக்கில் மூன்று பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு தற்போது அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு கூறியது என்ன?
கடந்த மாதம் 24 ஆம் தேதி மத்திய அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பையை வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1-4-2003 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 1-1-2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசு பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
எனினும் மாநில அரசு பணியாளர்கள் 1-4-2003 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு வழங்கிட கீழ்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
ககன்தீப் சிங் பேடி (கூடுதல் தலைமைச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை), டாக்டர் கே ஆர் சண்முகம் (முன்னாள் இயக்குனர், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்), பிரதீக் தாயல் (துணைச் செயலாளர் வரவு செலவு நிதித்துறை உறுப்பினர் செயலர்) இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - இன்றே கடைசி நாள்! ஓய்வூதியர்களுக்கு முக்கிய தகவல்.. மாவட்ட ஆட்சியர் கோரிக்கை!
மேலும் படிக்க - ஓய்வூதியர்கள் கூடுதல் பென்சன் குறித்து ஹாப்பி நியூஸ்! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு மாற்றுத்திறனாளி பென்ஷன், இரட்டை பென்ஷன் குறித்து முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ