124 Year Old Chinese Woman Reveals Tips For Longevity : ஒரு மனிதனுக்கு சாதாரண ஆயுட்காலமே, 70-80 வரைதான். ஆனால் அதையும் தாண்டி ஒரு சிலர் 100 வயதை கடந்து வாழ்வதை பார்த்து வருகிறோம். இப்படி வாழ்வதற்கு தங்களின் இளமை காலத்தில் உடலை ஆக்டிவாக வைத்துக் கொண்டவர்களாக இருப்பர். அல்லது ஆரோக்கியமான இயற்கை உணவுகளை சாப்பிட்டவர்களாக இருப்பர். இதற்கு உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் மிகவும் அவசியமாகும். வாழ்வில் என்ன தடைகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து இப்போது சமீபத்தில் 124 வது பிறந்தநாள் கொண்டாடிய சீனப் பெண் குறித்து இங்கு பார்க்கலாம்.
124 வயதை கடந்த சீனப் பெண்:
இவரது பெயர், Qui Chaishi. சீனாவில் உள்ள, Nanchong என்னுமிடத்தில் வாழ்ந்து வருகிறார். 1901ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர், சமீபத்தில் தனது 124 வது பிறந்தநாளை கொண்டாடினார். சீனாவில் ஒரு நூற்றாண்டை கடந்து வாழும் பெண் இவர். சொல்லப்போனால், Qing அரசின் ஆட்சிக் காலத்தில் இருந்து, இப்போது இருக்கும் மாடர்ன் டெக்னாலஜி நிறைந்த சீனா வரை, அனைத்தையும் பார்த்து வாழும் ஒரு பெண் இவர்.
Qui, கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளை பார்த்த பெண்ணாக வாழ்ந்து வருகிறார். இந்த தலைமுறை இதுவரை நீல்கிறது என்றால், இவருக்கு 60 வயதில் ஒரு பேத்தியும், எட்டு மாத கைக்குழந்தையாக ஒரு கொள்ளுப்பேத்தியும் இருப்பதாக கூறப்படுகிறது.
நீண்ட ஆயுளுக்கான சீக்ரெட்:
தனது நீண்ட ஆயுள் குறித்து சமீபத்தில் Qui, ஒரு பத்திரிக்கைக்கு வீட்டில் அளித்திருக்கிறார். அதில், வாழ்வில் எந்த சிரமம் ஏற்பட்டாலும் அதனை நல்லதற்காக என்று நினைத்துக் கொள்வதே தான் இத்தனை வருடங்கள் வாழ்ந்ததற்கு காரணம் எனக் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, Qui இப்போது சீனாவில் வாழ்ந்த வரும் பகுதியில் இவரை போல வயதானவர்கள் பலர் உள்ளனர். இங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களுக்கு என்ன தயாரிக்கப்பட்ட டயட் மற்றும் சில உடற்பயிற்சிகளை பின்பற்றுகின்றனர். இந்த 124 வயதிலும் Qui, தனக்கான வேலைகளை தானே பார்த்துக் கொள்கிறாராம். தன் தலையை வாரிக் கொள்வது, தீ மூட்டுவது, வாத்துகளுக்கு உணவளிப்பது என அனைத்தையும் இவரை செய்கிறார். படிகளை கூட, இவரால் ஏற முடியுமாம்.
சாப்பிடும் உணவுகள்:
Qui, தினமும் lard rice எனப்படும் ஒருவித அரிசியில் செய்த கஞ்சியை குடிக்கிறார். இதில் பூசணிக்காய், முலாம்பழம் மற்றும் நசுக்கிய சோளங்கள் ஆகியவை போடப்பட்டிருக்கும். அவ்வப்போது தனது மருத்துவர் கூறும் சில டயட்டையும் இவர் பின்பற்றுகிறாராம்.
மன உறுதி:
124 வயதாகும் Qui, தன் வாழ்வில் சந்தித்த சிரமங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். இவர், 40 வயதில் இருந்த போது அவரது கணவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டாராம். இதையடுத்து தனது 4 குழந்தைகளையும் தனியாலாக வளர்த்து ஆளாக்கி இருக்கிறார். இவருக்கு வயதான பின்பு அவரது மூத்த மகனும் இறந்து விட்டாராம். இதனால் அவரது மருமகள், தனது குழந்தயை Qui-விடம் விட்டுவிட்டு, வேறு ஒரு திருமணம் செய்திருக்கிறார். அந்த குழந்தையையும் Qui ஒண்டி ஆளாக வளர்த்திருக்கிறார். இந்த பேத்தியும், திருமணம் முடித்த பின்னர் கணவனை இழந்திருக்கிறார். அப்போது, அவருக்கும் பக்க பலமாக இருந்து ஆதரவு கொடுத்திருக்கிறார், Qui. இப்படி, 124 வயதை கடந்து வாழ, உடல் உறுதி மட்டுமல்ல, மன உறுதியும் தேவை என்பதை காட்டுகிறது Qui-வின் வாழ்க்கை.
மேலும் படிக்க | என்ன சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத ஜப்பானியர்கள்! ‘இந்த’ 5 பழக்கங்கள் காரணம்..
மேலும் படிக்க | வெயிட் லாஸ் ஆக கொரியர்கள் குடிக்கும் மேஜிக் பானங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ