சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி

Virat Kohli | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்துவிட்டால் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2025, 09:46 PM IST
  • சாம்பியனஸ் டிராபி போட்டி நாளை
  • இந்தியா - வங்கதேசம் நாளை மோதல்
  • விராட் கோலியின் கணிப்பு நிறைவேறுமா?
சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி title=

Virat Kohli Latest News | பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டி தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பிப்ரவரி 20 ஆம் தேதியான நாளை வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விராட் கோலி சுவாரஸ்மான கருதுக்களை பகிர்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியா முதன்முதலாக வங்கதேசம் அணியை எதிர்கொண்டதாகவும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதாகவும், அதேபோல் தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் தொடங்குவதாக விராட் கோலி கூறியுள்ளார்.

விராட் கோலி பேட்டி

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக விராட் கோலி பேசும்போது, " எனக்கு எப்போதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற போட்டிகளைப் போல இந்த தொடர் இருக்காது. ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளின்போது ஒன்றிரண்டு போட்டிகளில் ஆரம்பத்தில் நீங்கள் தோற்றால் கூட அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அந்த தொடரில் நீடிக்க முடியும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை முதல் போட்டியில் இருந்தே உங்கள் மீது அழுத்தம் இருக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரில் இருக்க முடியாது. அதனால் தான் எப்போதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நான் விரும்புவேன்." என தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கணிப்பு என்ன?

தொடர்ந்து பேசிய விராட் கோலி, " வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டிகள் எப்போதும் சவாலாகவே இருக்கும். 2009, 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் 2011 உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் சவாலாக இருந்தன. எப்போதும் அந்த அணிக்கு எதிராக ஆடும்போது முழு போட்டியும் பரபரப்பாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றோம். இந்தமுறையும் சிறப்பாக விளையாடுவோம்" என தெரிவித்துள்ளார்.

விராட்கோலி கூறியதுபோல் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்திய அந்த உலக கோப்பையில் தான் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தயது. அதைப் போலவே இம்முறையும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் வெல்லவும் வாய்ப்பு இருக்கிறது. விராட் கோலியின் இந்த கணிப்பு நிறைவேறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி! 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்கள்! இனி மாற்ற முடியாது!

மேலும் படிக்க | கேப்டனாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்? சஞ்சு சாம்சனுக்கு ஆப்ரேஷன்! - வேறு யார் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News