இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் 7 படங்கள்!

வெள்ளிக்கிழமை என்றாலே தியேட்டர்களில் புது படம் இறங்குவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை (நாளை பிப்.21) என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

வெள்ளிக்கிழமை என்றாலே தியேட்டர்களில் புது படம் இறங்குவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை (நாளை பிப்.21) என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /7

மலையாளத்தில் கிரைம் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக officer on duty திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ஜித்து அஷ்ரஃப் இயக்கி உள்ளார். இப்படம் இன்று (பிப்.20) தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளது. 

2 /7

நடிகர் அப்புக்குட்டி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பிறந்தநாள் வாழ்த்துகள். இயக்குநர் ராஜீ சந்திரா இயக்கியத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நாளை (பிப்.21) வெளியாக உள்ளது. 

3 /7

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கெளதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ட்ராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் நாளை (பிப்.21) வெளியாகிறது. 

4 /7

தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் நாளை (பிப்.21) தியேட்டரில் வெளியாகிறது. 

5 /7

மலையாள திரைப்படமான Get Set Baby இயக்குநர் வினய் கோவிந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், நிகிலா விமல், ஷியாம் மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை (பிப்.21) தியேட்டரில் ரிலீஸாகிறது. 

6 /7

Ramam Raghavam திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ளது. இப்படம் நாளை (பிப்.21) தியேட்டரில் ரிலீசாக உள்ளது.   

7 /7

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் வெண்பா, ஸ்ரீ குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'ஈடாட்டம்'. கொலை வழக்கை புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியின் விசாரணை வளையத்திற்குள் வரும் ஹீரோ அதில் இருந்து எப்படி தப்பிக்க முயற்சிக்கிறார் என்பதே கதைக்களம். இப்படம் நாளை (பிப்.21) தியேட்டரில் வெளியாகிறது.