Reasons Why Tamil Nadu Is Against 3 Language Policy : தேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில் மும்மொழிக்கொள்கை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகம் ஏன் இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Reasons Why Tamil Nadu Is Against 3 Language Policy : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்கான நிதி குறித்து பேசினார். அப்போது, தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படும் என அவர் கூறியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. இதனால், தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் நாடு மும்மொழி கல்விக்கொள்கையை ஏன் இப்படி எதிர்க்கிறது என்பது குறித்து பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கான காரணத்தை, இங்கு பார்ப்போம்.
தேசிய கல்விக்கொள்கையை வலுவாக ஏற்க மறுக்கும் ஒரே இந்திய மாநிலம், தமிழ்நாடுதான். எப்போதெல்லாம் மத்திய அரசு, இந்தியை கட்டாய மொழியாக தமிழ் நாட்டில் களமிறக்க நினைக்கிறதோ அப்போதெல்லாம் போராடி அந்த திட்டத்தை எதிர்த்து நிற்பதில் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் சளைத்தவர்களாக இல்லை. இந்த நிலையில், தேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். இது, தமிழகத்தில் பெருமளவில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.
இந்த இந்தி திணிப்பு, இப்போது ஆரம்பித்தது அல்ல. 1937-40 மற்றும் 1965 ஆகிய்ய ஆண்டுகளிலும், அப்போதைய மத்திய அரசு இந்தியை தமிழ் நாட்டில் கட்டாய கல்வியாக மாற்ற நினைத்தது. இதனால், மொழி எதிர்ப்பு போராட்டம் வலுத்து இதில் பலர் வீரமரணமும் அடைந்திருக்கின்றனர்.
தமிழ் நாட்டை பொறுத்தவை, இங்கு தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகள் கட்டாயமாக்கப்படுகிறது. இதனை, 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டை ஆண்ட திமுக அரசு கொண்டு வந்தது. அதிலிருந்து, அதன் பின் வந்த அனைத்து கட்சிகளும் இதையே பின்பற்ற தொடங்கின.
மத்திய அரசு, தமிழக மக்களின் நலன் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல், தேசம் முழுவதும் தேசிய கல்விக்கொள்கையை பரப்புவதிலேயே கவனம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது, இந்திய இறையாண்மையை அசைத்து பார்க்கும் முயற்சியாக பல்வேறு அரசியல் கட்சிகளால் பார்க்கப்படுகிறது.
உலக மக்களின் நாகரிகத்தின் மூத்த மொழியாக பார்க்கப்படும் தமிழுடன், தமிழ்நாட்டு மக்கள் ஆங்கில மொழியையும் இணைப்பு மொழியாக பேசி வருகின்றனர். இதே நிலை தொடர் வேண்டும் என்றுதான் பெரும்பாலான மக்களும் அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன.
தமிழகத்தில், இந்தி கற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை என்றாலும், ஒரு மொழியை கட்டாயப்படுத்துவதை எப்போதும் நம் மாநில மக்கள் விரும்புவதில்லை. எனவே, தமிழ் நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தவிர வேறு ஒரு மொழியை கட்டாயமாக்குவது தமிழர்களின் உரிமையை பறிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.
நாட்டு மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மொழிக்கொள்கை, இப்படி ஒரு சார்பான அரசியல் கட்சி (பாஜக) அதன் கொள்கைகளுக்கு ஏற்றவாரு மாற்றப்படுத்துவதாகவும் மக்கள் கருதுகின்றனர்.